வெள்ளி, ஜனவரி 26, 2024

உவரியில் தேர்



நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 12
வெள்ளிக்கிழமை

திருச்செந்தூரில் இருந்து நாற்பது கிமீ., 
தொலைவில் உள்ள கடற்கரை கிராமம் உவரி..

தென் மாவங்களில் பிரசித்தமான 
உவரி ஸ்ரீ சுயம்பு லிங்க ஸ்வாமி 
திருக்கோயில் இங்குதான் உள்ளது.. 

ஆவணியில் பெருங்கொடை.. 

வைகாசி விசாகத்திலும் 
தைப் பூசத்திலும் 
பத்து நாள் திருவிழா ரதோற்சவம்... 

நேற்று 
ஸ்ரீ மனோன்மணி அம்பிகையுடன் 
ஸ்ரீ சந்திரசேகரர் திருத்தேரில் எழுந்தருளிய
தைப்பூசத் 
திருவிழாவின் 
சில காட்சிகள் இன்றைய பதிவில்..
**

படங்கள் காணொளிகளுக்கு நன்றி 
உவரி ஸ்ரீ சுயம்பு லிங்க ஸ்வாமி பக்தர் பேரவை..
















 

இல்லக விளக்கது
  இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
  சோதி யுள்ளது
பல்லக விளக்கது
  பலருங் காண்பது
நல்லக விளக்கது
  நம சிவாயவே.. 4/11/8
-: திருநாவுக்கரசர் :-
**


இன்று
பாரதத் திருநாட்டின்
குடியரசு நாள்..

அனைவருக்கும்
அன்பின்
நல்வாழ்த்துகள்



வாழ்க பாரதம்
வாழ்க பாரதம்..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. ஆதிசிவன் தாள்பணிந்து அருள்பெற வேண்டிக்கொண்டேன்.  அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. தேரோட்ட தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்
    மலர் சப்பரங்கள், மற்றும் பச்சை சாற்றிய சப்பரம் அழகு. தேர் காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. உவரி ஸ்ரீ சுயம்பு லிங்க ஸ்வாமி
    திருக்கோயில் தேரோட்ட படங்கள் கற்பூர காட்சிகளுடன் மிகவும் அழகாக உள்ளது . இறைவனை மனமாற தரிசித்து கொண்டேன்.

    குடியரசு தினப்படங்களும் அருமை. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. உவரி சுயம்புலிங்க சுவாமி தேர் படங்கள் அருமை.கண்டு வணங்கினோம்.

    அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..