வெள்ளி, மே 26, 2023

திரு அருணை

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 12
வெள்ளிக்கிழமை

இன்று
திரு அருணைத் திருப்புகழ்


தனனா தனனத் தனனா தனனத் 
தனனதா தனனத் ... தனதான

அருமா மதனைப் பிரியா தசரக் 
கயலார் நயனக் ... கொடியார்தம்
அழகார் புளகப் புழுகார் சயிலத் 
தணையா வலிகெட் ... டுடல்தாழ

இருமா நடைபுக் குரைபோ யுணர்வற் 
றிளையா வுளமுக் ... குயிர்சோர
எரிவாய் நரகிற் புகுதா தபடிக் 
கிருபா தமெனக் ... கருள்வாயே

ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட் 
டுரமோ டெறிபொற் ... கதிர்வேலா
உறைமா நடவிக் குறமா மகளுக் 
குருகா றிருபொற் ... புயவீரா

திருமால் கமலப் பிரமா விழியிற் 
றெரியா வரனுக் ... கரியோனே
செழுநீர் வயல்சுற் றருணா புரியிற் 
றிருவீ தியினிற் ... பெருமாளே..
-: அருணகிரி நாதர் :-


அழகனாகிய மன்மதனை விட்டுப் 
பிரியாத பூங்கணைகளைப் போன்றதும் கயல் போன்றதுமாகிய கண்களை உடைய 
பொல்லா மங்கையரின்

அழகுடன் பூரித்து புனுகு மணம் கமழும், 
மலை போன்ற மார்பகங்களில்
அணைந்து இணைந்து
வலிமை இழந்து உடல் நலிந்து 
இருமலில் வீழ்ந்து பேச்சும் உணர்வும் அற்று

இளைத்து 
உள்ளம் மெலிந்து உயிர் சோர்வடைந்து
எரியும் நரக நெருப்பில் புகாத வண்ணம்
எனக்கு உன் திருவடிகளைத்
 தந்தருள்வாயாக..

பெரியதாய் நின்ற கிரெளஞ்ச மலை 
சிறு சிறு துகளாகும் படிக்குச் செய்த
வலிமை மிக்க கதிர் வேலினை உடையவனே

மான்கள் துள்ளித் திரிகின்ற 
வனத்தில் குறமகள் வள்ளிக்கு உருகிய 
பன்னிரு தடந்தோள் பெருவீரா

திருமாலும் 
தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மனும் 
காண்பதற்கு அரியவராகிய 
சிவபெருமானின் திருக்குமாரனே

நீர் நிறைந்த செழுமையான வயல்களால் 
சூழப்பட்டிருக்கும் திருஅண்ணாமலையின் 
திருவீதிகளில் மகிழ்ச்சியுடன் 
உலா வருகின்ற பெருமாளே!..
**

முருகா.. முருகா..
***

5 கருத்துகள்:

  1. முருகா முருகா முருகா... வருவாய் மயில் மீதினிலே...  வரமும் தனமும் அருள்வாய்...

    பதிலளிநீக்கு
  2. சிறப்பாக இருக்கிறது. திரு அருணை திருப்புகழ்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. திருப்புகழ் பாடலை பாடி முருகனை வேன்டிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களின் வாயிலாக தெய்வ தரிசனமும் பெற்றுக் கொண்டேன். திருப்புகழ் பாடலும், விளக்கமும் படித்து தெரிந்து கொண்டேன். முருகன் அனைவரையும் காத்தருள வேண்டிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வெள்ளி நாளில் முருக தரிசனம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..