வெள்ளி, நவம்பர் 06, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
வெள்ளிக்கிழமை


இன்று திருநாவுக்கரசர் அருளிச்செய்த திருப்பாடல்

பாவ நாசத் திருப்பதிகம்..

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்
ஒங்கு மாகடல் ஓத நீராடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.. 5/99/2


கங்கை நதியில் நீராடினாலும் , காவிரி நதியில் நீராடினாலும் , மணமும் குளிர்ச்சியும் உடைய குமரித் துறையில் நீராடினாலும் , பெருகி ஒலிக்கின்ற கடல் துறை தோறும் நீராடினாலும் என்ன பயன்?...

எங்கும் இறைவன் என்னாதவர்க்கு இவற்றால் எவ்வித பயனும் இல்லை...

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***


6 கருத்துகள்:

  1. யாராக இருந்தாலும் கடைசி காலத்திலாவது ஆண்டவனை நினைத்து விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவனை நினைக்க அவனே வரம் தர வேண்டும்...

      ஓம் நம சிவாய

      நீக்கு
  2. பாவநாசத் திருப்பதிகம் படித்து இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. பாபநாசம் திருப்பதிகம் பாடி இறைவனை வணங்கினோம்.

    அவனருளால் அவன் பாதம் தொழுது நிற்போம்.

    ஓம் நமசிவாய.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..