வெள்ளி, ஆகஸ்ட் 28, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
வெள்ளிக்கிழமை

திருமறைக்காட்டு மணாளன்

திருமறைக்காட்டில் 
திருநாவுக்கரசரால் திறப்பிக்கப்பட்ட
  திருக்கோயிற் கதவங்கள் அடைத்துக் கொள்ளுமாறு
ஞானசம்பந்தப் பெருமான்
 பாடியருளிய திருப்பதிகத்தின் முதல் பாடல்

சதுரம் மறைதான்
  துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ்
  மறைக்காட்டுறை மைந்தா
இதுநன்கு இறைவைத்
  தருள்செய்க எனக்குன்
கதவந் திருக்காப்புக்
  கொள்ளுங் கருத்தாலே... 2/ 37/1

தேன் மலர்கள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்திருக்கும் திருமறைக்காட்டில் வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்கும்படிக்கு வீற்றிருக்கும் பெருமானே!..

உனது திருக்கோயிலின் கதவுகள் முன்னிருந்தவாறே திருக்காப்பு கொள்ளும்படி வினவிய எனக்கு   நல்ல வண்ணம் விடை அருள்வாயாக..

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

3 கருத்துகள்:

  1. திருமறைக்காட்டு திருக்கோவில் "தாழ் திறவாய் திருக்கதவே.....பாடலுடன் ....


    ".....மறைக்காட்டுறை மைந்தா
    இதுநன்கு இறைவைத்
    தருள்செய்க எனக்குன்
    கதவந் திருக்காப்புக்
    கொள்ளுங் கருத்தாலே.."
    இரு பாடல்பகிர்வுகளும் கண்டு திருமறைக்காட்டு இறைவனை வணங்கினோம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
  2. பயணத்தைப் பற்றி எழுதியிருப்பீங்கன்னு நினைத்தேன்.

    இன்னும் ஊர் வந்து சேரலையா?

    பதிலளிநீக்கு
  3. படத்தில் டி எல் மகராஜன் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் என்று நினைக்கிறேன்.  ஐந்தெழுத்து மந்திரம் சொல்லி ஐயனைத் தொழுவோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..