நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி 22
வெள்ளிக்கிழமை
ஆடிக்கிருத்திகை
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ... தனதான
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து ... இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து ... பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து ... துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற ... னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த ... மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க ... வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த ... கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
நன்றி
கௌமாரம்
முருகா முருகா
***


அருமை. குமரன் நம்மையெல்லாம் காக்கட்டும். ஆடிக்கிருத்திகை நாள் வணக்கங்கள்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
நேற்று முன்னாள் அ நி ம பழைய ஞாபகத்தில் உள்ளே செல்ல முயன்றபோது கட்டுப்படுத்தப்பட்ட செய்தி சந்தோஷம் தந்தது.
பதிலளிநீக்குசந்தோஷம் என்றாலும் பொது வழியில் அனுப்பி வைத்திருக்க வேண்டும்..
நீக்குமுருகன் பெரியவன்...
மிக நல்ல பாடல் பதிவு
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி..
ஆடி வெள்ளிக் கிருத்திகை நாளில் முருகன் பாடல் பாடி வணங்கினோம்.
பதிலளிநீக்குபழநீ மலை முருகா உன் பாதம் சரணம்.
ஓம் முருகா.
மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா..
திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஆடிக்கிருத்திகை பதிவு அருமை. அருணகிரிநாதர் பாடிய பாமாலை பாடி, அழகான முருகப்பெருமானை பணிந்து வணங்கி கொண்டேன். முருகனருள் எப்போதும் அனைவருக்கும் கிடைத்திடவும் பிரார்த்தனைகள் செய்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா