புதன், ஜூலை 22, 2026

சுவாதி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆடி சுவாதி
 ஸ்ரீ சுந்தரர் குருபூஜை

சுந்தரர் அயிராவணம் எனும் யானையின் மீது ஆரோகணித்து 
சேரமான் பெருமாள் நாயனாருடன்
திருக்கயிலை சென்றடைந்த நாள்

திரு ஆரூரில் பரவை நாச்சியாரும்
திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரும்
சிவகதி எய்தினர்..


பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
    போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப்
    பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா
    எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்து அணி
    ஆரூரானை மறக்கலுமாமே.. 7/59/1

சுந்தரர் திருவடிகள் போற்றி
பரவையார் திருவடிகள் போற்றி
சங்கிலியார் திருவடிகள் போற்றி
சேரமான் திருவடிகள் போற்றி

சிவாய நம ஓம்
***

வெள்ளி, ஜூலை 17, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி
 முதல் வெள்ளி


இன்று
திருநாவுக்கரசர் அருளிச்செய்த
நம சிவாய திருப்பதிகம்

நான்காம் திருமுறை
திருப்பதிக எண் 11

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நம சிவாயவே.. 4/11

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நம சிவாயவே..2

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்று மில்லையாம்
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நம சி வாயவே..3

இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளி நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நம சிவாயவே..4

வெந்தநீ றருங்கலம்
  விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம்
  அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலம்
  திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம்
  நம சிவாயவே.  5

சலமிலன் சங்கரன்
  சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறும்
  நல்குவான் நலன்
குலமில ராகிலுங்
  குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது
  நம சிவாயவே.  6

வீடினார் உலகினில்
  விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி
  கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென்று
  உருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று
  நம சிவாயவே.  7

இல்லக விளக்கது
  இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
  சோதி உள்ளது
பல்லக விளக்கது
  பலருங் காண்பது
நல்லக விளக்கது
  நம சிவாயவே.  8

முன்னெறி யாகிய
  முதல்வன் முக்கணன்
தன்னெறியே சர
  ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங்
  கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது
  நம சிவாயவே.  9


மாப்பிணை தழுவிய
  மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி
  பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய
  நம சிவாயப்பத்து
ஏத்தவல்லார் தமக்கு
  இடுக்க ணில்லையே.  10
திருச்சிற்றம்பலம்

இந்தப் பதிவுக்கு உந்திய
அன்பின் நெல்லை அவர்களுக்கு நன்றி

ஓம் சிவாய நம
***

புதன், ஜூலை 15, 2026

தவம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆனி
புதன்கிழமை



இன்று

வாராது வந்த மாமணியின் பிறந்த நாள்..

மீண்டும் பெருந்தலைவர் கிடைப்பாரோ?..

தவம் இருப்போம்..

நலம் வாழ்க
***

செவ்வாய், ஜூலை 14, 2026

அப்பன் நீ

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 செவ்வாய்க்கிழமை


அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
    அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
    ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
    துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
    இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய
***

வெள்ளி, ஜூலை 10, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 வெள்ளிக்கிழமை
ஏகாதசியும் கிருத்திகையும்


இன்று
திருநாவுக்கரசர் தேவாரம்

வேத நாயகன்
  வேதியர் நாயகன் 
மாதின் நாயகன்
  மாதவர் நாயகன் 
ஆதி நாயகன்
  ஆதிரை நாயகன் 
பூத நாயகன்
  புண்ணிய மூர்த்தியே. . 5/100/1

வேதங்களுக்கும் வேதியர்க்கும் நாயகன்.

 உமாதேவியின் நாயகன்.

 பெருந்தவம் உடைய முனிவர்களுக்கும் நாயகன்..

ஆதி நாயகன் என்றாகி, ஆதிரை என்ற விண்மீனுக்கும்  - பஞ்ச பூதங்களுக்கும் நாயகன் ஆகிய புண்ணியமூர்த்தியே சிவபெருமான்.. 
 
நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

வியாழன், ஜூலை 09, 2026

பிரார்த்தனை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 வியாழக்கிழமை


எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்!..

முருகா முருகா
***

திங்கள், ஜூலை 06, 2026

சரணம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 திங்கட்கிழமை



ஸ்ரீ வேங்கடேசாய மங்களம்

ஹரி ஓம்
***

வெள்ளி, ஜூலை 03, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 வெள்ளிக்கிழமை


இன்று
திருநாவுக்கரசர் தேவாரம்

தீர்த்தனைச் சிவனைச் சிவ லோகனை
மூர்த்தியை முத
  லாய ஒருவனைப்
பார்த்த னுக்கு அருள்
  செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடி
  யேன் மறந்து உய்வனோ.. 5/2/2

பாசங்களின் நீங்கி நின்று தன்னை அடைந்தார்க்கு அவற்றை நீக்கியருளும் தூயவனை  சிவபெருமானை சிவலோகனை ஞான உருவினனை  உலகத் தோற்றத்திற்கு முன்
மூலமாய் நின்றவனை  பார்த்தனுக்கு வேடனாய்த் தோன்றி பாசுபதம் ஈந்து அருள் செய்த சிற்றம்பலக் கூத்தனைக் கொடியேனாகிய நான் மறந்து உய்வடைவேனோ ? ..

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***