நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
மாசி
வெள்ளிக்கிழமை
திருப்புகழ்
பொது
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ... தனதான
ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்கு
மேவதுப ழிக்கும் ... விழியாலே
ஏதையும ழிக்கு மாதர்தம யக்கி
லேமருவி மெத்த ... மருளாகி
நாடுநகர் மிக்க வீடுதன மக்கள்
நாரியர்கள் சுற்ற ... மிவைபேணா
ஞானஉணர் வற்று நானெழுபி றப்பும்
நாடிநர கத்தில் ... விழலாமோ..
ஆடுமர வத்தை யோடியுடல் கொத்தி
யாடுமொரு பச்சை ... மயில்வீரா
ஆரணமு ரைக்கு மோனகவி டத்தில்
ஆருமுய நிற்கு ... முருகோனே
வேடுவர்பு னத்தில் நீடுமித ணத்தில்
மேவியகு றத்தி ... மணவாளா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த ... பெருமாளே..
:- அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
முருகா முருகா
முருகா முருகா
***

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும். முருகப் பெருமான் அனைவருக்கும் நல்லதையே அளிக்கட்டும்.
நல்லதே நடக்கட்டும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றி வெங்கட்
கந்தன் காலடியை வணங்கினால்
பதிலளிநீக்குகடவுள்கள் யாவரையும் வணங்குதல்
போலே..
முருகா சரணம்
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
கந்தனிடம் செல்லுங்கள்.. என்ன வேண்டும் சொல்லுங்கள்..
பதிலளிநீக்குஓம் முருகா...
மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. திருப்புகழ் பாடி முருகனை வழிபாட்டுக் கொண்டேன். முருகன் அனைவருக்கும் நல்லதையே நடத்தித் தரட்டும். முருகா சரணம்.🙏 முத்துக் குமரா சரணம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முருகா சரணம்
நீக்குமகிழ்ச்சி..
நன்றியம்மா
முருகா சரணம்.
பதிலளிநீக்குதிருப்புகழ் பாடல் பாடி வணங்கினோம்.
முருகா சரணம்
நீக்குமகிழ்ச்சி..
நன்றியம்மா