புரட்டாசி 4
நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
நான்காம்
சனிக்கிழமை
ஸ்ரீநிவாசா
கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா
கோவிந்தா
பக்த வத்சல
கோவிந்தா
பரம தயாளா
கோவிந்தா..
கோவிந்தா ஹரி
கோவிந்தா
நந்த நந்தன
கோவிந்தா..
கோவிந்தா ஹரி
கோவிந்தா
பாப விமோசன
கோவிந்தா..
இன்றைய பாடல்
நன்றி இணையம்
ஸ்ரீ ஸ்ரீநிவாசாய மங்கலம்
ஓம் ஹரி ஓம்நமோ வேங்கடேசாய
**
இனிமையான பாடல். திருப்பதி பெருமாளை 2002ல் 2003 பார்த்தது பிறகு பார்க்கும் அதிர்ஷ்டம் இல்லை.
பதிலளிநீக்குசில ஆண்டுகளாயிற்று தரிசனம் செய்து...
நீக்குஐயன் மனது வைத்தால் ஆகும்...
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்..
சனிக்கிழமைகளில் சுப்ரபாதம் போல சுப்ரபாதத்துடன் சேர்ந்து அதாவது வெங்கடேச சுப்ரபாதத்துடன் சேர்ந்து கெட்டியம் என்ற ஒன்று வரும். அது கேட்பதற்கு நன்றாக இருக்கும். ராகங்கள் பெயர், நதிகளின் பெயர் எல்லாம் அதில் வரும். அதைக் கேட்பதில் என் அப்பாவுக்கு ரொம்ப இஷ்டம்
பதிலளிநீக்குவெங்கடேச சுப்ரபாதத்துடன் சேர்ந்து வரும் கெட்டியம் என்பதனக் கேட்டதில்லை...
நீக்குதங்களிடம் இணைப்பு இருப்பின் எ பி யில் பதிவு செய்யலாமே...
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. புரட்டாசி சனிக்கிழமையன்று திருப்பதி பெருமாளை கண்குளிர தரிசனம் செய்ய வைத்து விட்டீர்கள். பகிர்ந்த பாடல் இனிமை. முன்பெல்லாம் இந்தப் பாடலை கேட்கும் பொழுதினில், ஆனந்த மிகுதியில் கூடவே பாடி மெய் சிலிர்த்திருக்கிறோம். ஸ்ரீ வேங்கடேசாய நமஃ. 🙏. ஸ்ரீ வேங்கடவன் அனைவரையும் நலமாக வைத்திருக்க வேண்டிக் கொள்கிறேன். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிய பொருள் பொதிந்த பாடல் தான்
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றியம்மா
"ஸ்ரீநிவாச கோவிந்தா ஸ்ரீவெங்கடேசா கோவிந்தா.."..
பதிலளிநீக்குதிருப்பதி ஒருதடவை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
தங்கள் வருகையும்
நீக்குஅன்பின் கருத்தும் மகிழ்ச்சி
நன்றியம்மா..
திருப்பதிக்கு இந்த மாதமும், டிசம்பரிலும் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. பார்ப்போம் எப்படி தரிசனம் அமைகிறது என்று. சென்ற மார்கழியில் சென்றிருந்தேன்.
பதிலளிநீக்குஅன்பின்நெல்லை அவர்களுக்கு நல்வரவு.
நீக்குதங்கள் வருகையும்
கருத்தும் மகிழ்ச்சி
நன்றி..