புதன், மே 07, 2025

ரயில்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 24 
புதன்கிழமை


தமிழக தொடர் வண்டி நிலையங்களின் வருவாய் அடிப்படையில் முதல் 25 நிலையங்களின் வரிசைப் பட்டியல்..

சென்னை சென்ட்ரல் 1
சென்னை எழும்பூர் 2
கோயம்புத்தூர் 3
சென்னை தாம்பரம் 4
மதுரை 5
திருச்சிராப்பள்ளி 6
காட்பாடி 7
திருநெல்வேலி 8
சேலம் 9
ஈரோடு 10
திருப்பூர் 11
சென்னை பெரம்பூர் 12
நாகர்கோயில் 13
திண்டுக்கல் 14
விழுப்புரம் 15
தஞ்சாவூர் 16
ஜோலார்பேட்டை 17
அரக்கோணம் 18
செங்கல்பட்டு 19
கன்னியாகுமரி 20
தூத்துக்குடி 21
விருதுநகர் 22
கும்பகோணம் 23
மயிலாடுதுறை 24
கோவில்பட்டி 25


நன்றி 
தஞ்சை ரயில் பயணியர் சங்கம் Fb


இத்தனைக்கும் தஞ்சையில் இருந்து சென்னைக்கு தினசரி விரைவு வண்டி ஒன்று மட்டும்.. பெங்களூருக்கு அந்தப் பக்கம் வரை செல்கின்ற வாராந்திர விரைவு 
வண்டி ஒன்று.. அவ்வளவே..

திருப்பதிக்கோ நாகர்கோயிலுக்கோவேறு பெரு நகரங்களுக்கோ தஞ்சையில் இருந்து புறப்படுகின்ற வண்டிகள் எவையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை வழித்தடம் கூட எழுபது வருடங்களுக்கு மேலாக கிடப்பில்! ...

இங்கே காவிரிப் படுகை மாவட்டங்களில் - சுற்றுலாவிலும் மற்ற நிலைகளிலும்  எங்கள் ஊர் தான் பெரிய ஊர் என்ற அளவில் எப்போதும் புரளி ஒன்றை
 உருட்டிக் கொண்டு இருப்பார்கள்..

இருக்கட்டும்..
இருக்கட்டும்..

மேலே உள்ள தர வரிசைப் பட்டியலில் 
தஞ்சை சந்திப்பின் வருவாய் நிலையைத்
தெளிவாகக் கண்டு கொள்க...

இன்று தஞ்சையில்
தேர்த் திருவிழா

வாழ்க தஞ்சை
வளர்க தஞ்சை 
**

4 கருத்துகள்:

  1. இதில் என்ன இருக்கிறது? இதுபோன்ற கணக்கெடுப்புகள் பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும் என்பது உ நெ க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது வருவாய் சம்பந்தப்பட்ட விஷயம், எனவே உ நெ க தான்..

      தங்கள் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. ரயில் விபரங்கள் கண்டோம்.

    தஞ்சை தேர் திருவிழா சென்று இருப்பீர்கள் என நம்புகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..