சனி, நவம்பர் 16, 2024

கார்த்திகை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை முதல் நாள்
சனிக்கிழமை


தமிழ் ஆண்டின் எட்டாவது மாதம் கார்த்திகை.. சூரியன் விருச்சிக ராசியில் இயங்குகின்ற மாதம்..

கார்த்திகை மாதத்தின் முதல் நாள் காவிரியில் முடவன் முழுக்கு.. ஐப்பசி மாதம் முழுதும் நீராடிய  பலனைத் தருகின்ற நாள்..

கார்த்திகை சுப முகூர்த்தங்கள் நிறைந்த மாதம் ஆகும்..

இம்மாதத்தில் தீப தானம் செய்வது சகல தோஷங்களையும் பாவங்களையும் போக்கும் என்பது ஐதீகம்..

கார்த்திகை திங்களில் பௌர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்றதாகும்

கார்த்திகையின் நட்சத்திரங்கள் ஆறு
சரவணப் பொய்கையில் தோன்றிய சிவ குமரனை சீராட்டி வளர்த்த கன்னியர் அறுவருமே கார்த்திகை நட்சத்திரங்கள்  ஆயினர் என்பது ஸ்ரீ கந்த புராணம்..

அதன்படி சிவ ஸ்கந்த வழிபாட்டிற்கு உகந்த மாதம்..

ஈசன் எம்பெருமான் திரு அண்ணா மலையில் அருட் பெருஞ் ஜோதியாக  தரிசனம் அளித்தது கார்த்திகை நாளில்..

சபரிமலையில் வீற்றிருக்கின்ற ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியின் மண்டல பூஜை வழிபாட்டிற்காக விரதம் மேற் கொள்வோர் மாலை அணியும் நாள்  கார்த்திகை முதல் நாள்..

கார்த்திகை மாதத்தின் திங்கட் கிழமைகள் சிவ வழிபாட்டிற்கு உகந்தவை..

கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும என்பது வைணவ மரபு..

கார்த்திகை தீபம் என்பது சிவ வைணவ சமயங்களின் தொன்மை..

மயிலைத் திருப்பதிகத்தில் கார்த்திகை விளக்கீடு என்று குறிக்கின்றார் திருஞானசம்பந்தர்..

கார்த்திகை மாதத்தில் கோயில்களில் தீபம் ஏற்றி வழிபடுவதும், வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றி வைப்பதும் சகல  நன்மைகளையும் அள்ளித் தரும்  என்பது ஆன்றோர் வாக்கு...

கார்த்திகையை வணங்கி வர்வேற்று எல்லா நலன்களையும்  எய்துவோம்.
ஃஃ


உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே..1/10/1
-: திருஞானசம்பந்தர் :-

நேற்று 
அன்னாபிஷேக தரிசனம்


ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்


ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்


கார்த்திகை மாதம் சனிக்கிழமையன்று பிறக்கின்றது..

ஐயப்ப பக்தர்களுக்கு வரப்ரசாதம்

பூதநாத சதானந்தா
சர்வபூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நம;

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 

ஓம் 
நம  சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதத்தை வரவேற்போம். மால் மருகனை வணங்கி மகிழ்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கார்த்திகையை வணங்கி வரவேற்போம்..

      மகிழ்ச்சி,
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. கார்த்திகை மாதத்தின் சிறப்புக்கள் அனைத்தையும் தரும் பகிர்வு.

    கார்த்திகையை வணங்கி வரவேற்போம் அனைவர் வாழ்விலும் ஒளி வீச வேண்டி நிற்போம்.
    ஓம் சிவாய நமக.
    ஐயப்பா சரணம்.
    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கார்த்திகை மாதத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறிய விதம் நன்று. முடவன் முழுககின் விஷேட தினமான இன்று சேர்ந்தாற் போல வந்த எம்பெருமான் ஈசனின் அன்னாபிஷேக காட்சிகளையும் கண்டு மகிழ்ந்தேன். படங்களின் வாயிலாக இறைவனையும், இறைவியையும் மனமாற வணங்கி தரிசித்துக் கொண்டேன். இறைவன் அனைவருக்கும் எல்லா நலன்களையும் தந்து அனைவரையும் நல்லபடியாக வைத்திருக்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது
      அன்பின் வருகையும்
      பிரார்த்தனையும்
      கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..