வியாழன், அக்டோபர் 31, 2024

தீபாவளி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 14
வியாழக்கிழமை

தீபாவளிப் பண்டிகை

அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள


இதோ தீபாவளி!.. 

பல வழிகளிலும் நாம் துயரருற்று 
உடலளவிலோ மனதளவிலோ 
 கஷ்டப்பட்டிருக்கின்றோம்..

எல்லாவற்றையும்
இந்நாளில் புறந்தள்ளி வைப்போம்..




நமது சந்தோஷம் நம்மோடு - என்றில்லாமல் நலிந்தோர்க்கும் மெலிந்தோர்க்கும் சற்றேனும் ஆதரவு காட்டி பண்டிகையைக் கொண்டாடுவோமாக!..

எல்லா வழிகளிலும் கவனமாக இருந்து தீபாவளி நாளை சிறப்பிப்போம்... 




தீபாவளி என்ற மகத்தான பண்டிகையை தீப ஒளித் திருநாள்  என்று - சிலர் அவர்களாகவே மாற்றி வைத்துக் கொண்டு -

டிவாலி,   டீ வாளி,  தீ வாளி என்றெல்லாம் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றனர் - ஊடக விளம்பரங்களில்.. 

அதிலே ஒரு அற்ப
மகிழ்ச்சி..  


1980  களில்  தீபாவளி நாளன்று    விடியற் காலையிலேயே திருச்சிராப்பள்ளி வானொலி -  மங்கல இசை முழக்கத்துடன் ஆன்றோர்களது அருளுரைகளை ஒலிபரப்பு செய்யும்..

அப்படியொரு நிகழ்வில்  வாரியார் ஸ்வாமிகளின் அருளுரையில் இருந்து தான் -

சிவபெருமானுக்குரிய எட்டு விரத நாட்களில் தீபாவளியும் ஒன்று.
 
தீபாவளி.. தீப 
ஆவளி எனில்  - தீபங்களின் வரிசை என்ற பெயர்க் காரணத்தையும் தெரிந்து கொண்டேன்.. 

ஆனால், சமீப காலங்களில்  - மக்களின் அதீத ஆர்வத்தினால்
மாமிச உணவுகளில் புரள்வதும் மதுப் புட்டிகளுடன் உருள்வதும் தான் தீபாவளி என்று பதிவாகிக் கொண்டு இருக்கின்ற்து..

தீபாவளி என்கின்ற இந்த வார்த்தை தீபமாலை என்று 
தேவாரத்தில் வருகின்றது..

அந்நாளில்  தீபமாலை எனும் தீபாவளி  - பெரும் திருநாளாக இல்லாமல் சாதாரண நிகழ்வாகக் கூட இருந்திருக்கலாம்..

யார் கண்டது!?.. 

ஆயினும்,
தீபமாலை என்ற சொல் தீபாவளியைக் குறிப்பதாக சான்றோர் சொல்கின்றனர் ..

எண் திசைப் பாலகர்களாகிய இந்திரன் முதலானோர் மகிழ்ச்சியுடன் எங்கும் சூழ்ந்து    விளக்குகளை மகிழ்ச்சியுடன் ஏற்றி வைத்து தூபம் இட்டு வழிபடுகின்ற திருவடிகளை உடைய சிவ பெருமான்  உறைகின்ற கொச்சை வயம் எனப்படுகின்ற சீர்காழி..








எண்டிசை பாலரெங்கும் இகலிப் புகுந்து
  முயல்வுற்ற சிந்தை முடுகிப்
பண்டொளி தீபமாலை இடுதூப மோடு
  பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டல் மிண்டி வருநீர பொன்னி
  வயல்பாய வாளை குழுமிக்
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன
  வளர்கின்ற கொச்சை வயமே.  2/83/4
திருஞானசம்பந்தர் 
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்

அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் கவர்கின்றன. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      வாழ்த்துகளும்
      கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி

      நீக்கு
  2. தீபாவளி "சிவனுக்கு உரிய எட்டு விரதங்களில் ஒன்று " ...அறிந்தோம் மகிழ்ச்சி.
    தீபாவளி பற்றிய நல்ல பகிர்வு.

    உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். வாழ்க வளமுடன் நலமுடன்.இறை அருள் அனைவரையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      வாழ்த்துகளும்
      கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு
  3. இன்றைய சிறப்பு பதிவு நன்று. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..