செவ்வாய், அக்டோபர் 22, 2024

பயணங்களில்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 5
செவ்வாய்க்கிழமை


அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை தொடங்கி தாம்பரத்தில் இருந்து 
வண்டி எண் 06191 இயக்கப்படுகின்றது..

தாம்பரத்தில் இருந்து மாலை 3:30 மணியளவில் புறப்பட்டு செங்கல்பட்டு மேல்மருவத்தூர் திண்டிவனம் விழுப்புரம் திருப்பாதிரிப் புலியூர்,சிதம்பரம், சீர்காழி மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக திருச்சிராப்பள்ளியை இரவு 11:35 மணியளவில் சென்றடைகின்றது.. 

Intercity Express எனப்படும் இந்த ரயில் வாரத்தில் ஐந்து நாட்கள் (செவ்வாய் புதன் வெள்ளி சனி ஞாயிறு) இயக்கப்படுகின்றது..


அடுத்து
வண்டி எண் 06184 தாம்பரத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு.. வாராந்திர (வெள்ளி ) சிறப்பு ரயில் ..  

தாம்பரத்திலிருந்து மாலை 6:00 மணி அளவில் புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம் விழுப்புரம் பண்ருட்டி திருப்பாதிரிப்புலியூர் சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், ஒடடன்சத்திரம் பழனி, உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி கிணத்துக்கடவு போத்தனூர்  வழியாக மறுநாள் காலை 8:10   மணியளவில் கோயம்புத்தூருக்கு சென்று சேர்கின்றது. 

டெல்டா மக்கள்  பழனி மலை செல்வதற்கு ஏதுவாக இருப்பதால் மகிழ்ச்சி..


அடுத்து 
முன் பதிவு தேவையில்லாத
விரைவு ரயில் (06008)  தஞ்சாவூரில் புறப்பட்டு திருவாரூர்  வழியாக தாம்பரம் சென்றடைகின்றது.

வெள்ளிக் கிழமையன்று
(11.10.2024) இரவு 11:55 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு நீடாமங்கலம், திருவாரூர், பேரளம் மயிலாடுதுறை,  சிதம்பரம், பரங்கிப்பேட்டை  கடலூர் துறைமுகம், , விழுப்புரம்,  வழியாக தாம்பரம் சென்றடைந்துள்ளது.. 

இது பண்டிகைக் கால நெரிசலைக் குறைப்பதற்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்..

தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் - விழுப்புரம்  -  தாம்பரம்  வழித்தடத்தில் இது முற்றிலும் புதியது.. 

நீடாமங்கலம் திருவாரூரில் இருந்து சென்னை  செல்வதற்கும்,   திரும்புவதற்கும் இந்த ரயில்  பயனுள்ளதாக இருக்கின்றது..

இப்போதைக்கு சிறப்பு ரயில்
 என்றாலும் இந்த வழித் தடத்தில் இந்த ரயில் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என ,  இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.. 

கடந்த சில மாதங்களாக தஞ்சாவூர் ஜங்ஷனில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூபள்ளி ஜங்ஷன் வரை (திருச்சி, கரூர் சேலம் பெங்களூரு வழியாக) வாராந்திர விரைவு வண்டி ஒன்று இயங்கிக் கொண்டு இருக்கின்றது..


எதிர் வருகின்ற நாட்களில் இந்த சேவைகளில் இன்னும் பல நல்ல மாற்றங்கள் வரலாம்.. வர வேண்டும்..

இப்போதைக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்போம்..

வாழ்க தஞ்சை
வலர்க தஞ்சை

ஓம்  சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. சிறப்பு ரயில் பலருக்கு பயன்படும். வரவேற்போம்.

    பதிலளிநீக்கு
  2. நிரந்தரமாக்கப்பட்டால் மக்களுக்கு வசதிதான்.  பேருதவியாக இருக்கும்.  தினசரி அல்லது ஒன்று விட்டு ஒருநாள் சென்னையிலிருந்து சிதம்பரம் சென்று வரும் அரசு ஊழியர்களை நான் அறிவேன்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பு இரயில் தொடர்ந்து இயக்குவதோடு, நிரந்தரமாக இயக்கினால் நல்லது. பண்டிகை நாட்கள் மட்டுமல்லாது எல்லா நாட்களிலும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

    தகவல் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பு ரயில் சேவை நிரந்தரமாக்கப்பட்டால் மக்களுக்கு உதவியே .

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சிறப்பு ரயில் வண்டிகளின் தகவல்கள் பற்றி அறிந்து கொண்டேன். இதை பண்டிகை காலங்கள் மட்டுமின்றி, எப்போதும் நிரந்தரமாக்கினல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இந்தப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..