வியாழன், செப்டம்பர் 26, 2024

சந்தனக்காப்பு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 10
வியாழக்கிழமை


எங்கள் குடியிருப்பிலுள்ள ஸ்ரீ கார்ய சித்தி விநாயகப் பெருமானுக்கு கடந்த விநாயக சதுர்த்தியை அடுத்த மூன்றாம் நாள் சந்தனக்காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது..

ஸ்வாமியின் அலங்கார தரிசனம் இன்று..

பதிவின் வழி 
தரிசனக் காட்சி


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா
-: ஒளவையார் :-

அல்லல் போம் வல்வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்
போகாத் துயரம் போம் - நல்ல
குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும்
கணபதியைக் கைத்தொழுதக் கால்..
-: விவேக சிந்தாமணி :-


ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
போரானைக் கற்பகத்தைப் பேணினால் - வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்திதரும் சித்திதரும் தான்..
-: பழந்தமிழ்ப் பாடல் :-

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் 
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு 
துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதம் 
தப்பாமற் சார்வார் தமக்கு..
-: ஔவையார் :-


கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே..
-: கபிலர் :-

ஓம் கம் கணபதயே நம:

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. விக்கினங்களை தீர்க்கும் விநாயகனே.... எங்களையும் காப்பாய்.

    பதிலளிநீக்கு
  2. கொண்டாட்டம் ஒருபுறம் இருக்கட்டும். கொழுக்கட்டை கிடைத்ததா?

    ஹும்... நம் கவலை நமக்கு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் தாராளமாகக் கிடைத்தது

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. விநாயக பெருமானுக்கு சந்தனகாப்பு அலங்காரம் மிக அருமையாக இருக்கிறது. விநாயகர் பாடல்களை பாடி வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. சந்தனக்காப்பு அலங்காரம் நன்று.

    கொழுக்கட்டை கிடைத்ததா? ஹாஹா… அதானே! நம்ம கவலை நமக்கு! சரி தான்.

    பதிலளிநீக்கு
  5. சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் அழகாக அருள் பாலிக்கிறார்.

    பாடல்கள் பாடி வணங்கினோம்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது ஸ்ரீமகாகணபதியின் சந்தன அலங்காரம் சிறப்பாக உள்ளது. பாடல்களை பாடி கணபதியை பணிந்து வணங்கி கொண்டேன். இறைவன் அனைவருக்கும் நல்லதையே நடத்தி தரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. விநாயகா சரணம்
    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..