செவ்வாய், செப்டம்பர் 24, 2024

மேலவெளி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 8
செவ்வாய்க்கிழமை

மேலவெளி

தஞ்சை மாநகரின் மேற்கு எல்லையில் மாநகராட்சிக்கு உள்ளேயே பூதலூர் சாலையில்  அமைந்துள்ள சிறு கிராமம் தான் மேலவெளி..

பூதலூர் சாலை வளைவில்  நேர் வடக்காக ஒரு கிமீ தொலைவில் வடவாறு. ஆற்றின் கரையில்   பூஜ்ய ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் இருந்ததாக வரலாறு.. இங்கு ஸ்வாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது..

இந்த மேலவெளி கிராமத்தில் வடக்கு முகமாக இருக்கின்ற தொன்மையான அம்மன் கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டு ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில்  திருக்குடமுழுக்கு நடை பெற்றுள்ளது..
 
21/8 அன்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் ஆராதனையை முன்னிட்டு சென்றிருந்த போது இக்கோயிலைக் கண்டு மெய் சிலிர்த்தேன்... 

உச்சிப் போது ஆகி விட்டபடியால் நடை சாத்தப்பட்டிருந்தது.. 

அம்மன் கோடியம்மன்.. சிலா ரூபமாக அருள்கின்றாள்.. விநாயகர் கருப்பசாமி நாகர் - என, பரிவார மூர்த்திகள்..  

கூடவே தழைத்திருக்கின்ற அரசு வேம்பு... அருகில் பிரம்மாண்டமான முனீஸ்வரர்..

மனதுக்கு  இதமாக இருந்தது.. பத்து நிமிடம் அங்கு இருந்து மகிழ்ந்தோம்..

21/8 அன்று எடுக்கப்பட்ட காட்சிகள் தங்களுக்காக..














மேலவெளி எல்லையிலே
மேன்மை கொண்டு இருப்பவளே
மேலான நினைவுகளை
நெஞ்சந்தனில் வைப்பவளே..

கோடியம்மன் என்று இங்கே
கோயில் கொண்டு இருப்பவளே..
குற்றங்குறை பொறுத்தருளி
கோடி நலம் தந்திடம்மா..

தேடி வந்த அடியனுக்கு
தேக பலம் தந்திடம்மா
நாடி வந்த பாலனுக்கு
பாத பலம் தந்திடம்மா

திக்கு திசை அறியாமல்
திகைத்திருக்கும் எளியனுக்கு
தீப ஒளியாக வந்து
திருவருள் கூட்டிடம்மா..

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
**
ஓம்  சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. மேல வெளி வீதி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த இடம் பற்றி இப்போது கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேல வெளி வீதி மதுரையில்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஒரு வீதிக்கு மேல வெளி என்ற பெயரை கேள்விபட்டுள்ளேன். ஆனால், ஒரு கிராமமே இத்தகைய பெயருடன் விளங்குவதை இப்போதுதான் அறிகிறேன்.

    அங்குள்ள அம்மன் கோவில் புகைப்படங்களின் வாயிலாக நானும் அம்மனை பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன். படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.

    அம்மன் மேல் தாங்கள் துதிபாடி இயற்றிய பாடலை நானும் படித்து பரவசித்தேன். எல்லாம் அம்மன் அருள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  3. தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி

      நீக்கு
  4. மேலவெளி கோடி அம்மன் தரிசனம் கிடைத்தது.

    அம்மன் பாடல் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு
  5. நீங்கள் எழுதிய பாடல் அருமை. உங்கள் பாடலை பாடி அம்மனை வணங்கி கொண்டேன்.படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் அன்பான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  6. நல்ல தரிசனம். ஆலயம் திறந்திருக்கும் சமயத்தில் சென்றிருந்தால் இன்னும் தகவல்களை தந்திருக்கலாம். விரைவில் இந்த ஆலயத்தில் தரிசனம் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் செல்ல வேண்டும் என்றிருக்கின்றது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..