நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 6
ஞாயிற்றுக்கிழமை
கடந்த நிறைநிலா நாளன்று தஞ்சை ஸ்ரீ ராஜராஜேஸ்வரத்தில் கிரிவலம் நடை பெற்ற்து..
பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் திருக்கோயிலை வலம் செய்திருக்கின்றனர்..
ஒற்றை இரட்டையாய் பல ஆண்டுகளுக்கு முன்னரே அன்பர்கள் பலர் பௌர்ணமி நாளில் திருக்கோயிலை வலம் செய்திருக்க 2010 அளவில் கோட்டையின் திருச்சுற்று வழிநடை சீரமைக்கப்பட்டது..
புதர் செடி என - கரடு முரடாகக் கிடந்த பாதை ஒழுங்கு செய்யப் பெற்றது..
ஆனால் 2014 ல் கோயில் கோட்டை கிரிவலம் எதனாலோ தடை செய்யப்பட்டதாக சொல்கின்றனர்..
ஆனால் இப்போது தான் முதன்முதலில் ஆரம்பிப்பதாக தினமலர் சொல்கின்றது.. அதற்குத் தெரிந்தது அவ்வளவு தான்..
தற்போது கோலாகலமாக மீண்டும் கிரிவலம் தொடங்கியுள்ளது..
தஞ்சை பெரிய கோயில் ஸ்ரீ விமானத்திற்கு தக்ஷிணமேரு என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு...
அது ஏன்?...
நாளைய பதிவில் காண்போம்..
பதிவின் காணொளிகள் அனைத்தையும் காணுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்..
காணொளிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி
தினமலரின் செய்தி
சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டு உலாப் போதும்
குறிப்பெனோ கோங்கிணர் அனைய
குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்து
உக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்கு
இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத்து இவர்க்கே.
-: கருவூரார் :-
இராசராசேச்சரத் திருப்பதிகம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
கிரிவலம் செய்தி புதிது. காணொளிகள் கண்டேன். கிரிவலப் பெருமை பற்றி சிவாச்சாரியார் கூறுவது அருமை. இரவிலும் எடுத்த காணொளி நன்றாக வந்திருக்கிறது.
பதிலளிநீக்குஎவ்வளவு பக்தர்கள். அடேயப்பா
தக்ஷஇணமேரு வலம் எவ்வளவு நேரம் எடுக்கும்? எவ்வளவு முறை வலம் வருவார்கள்?
நெல்லை அவர்களுக்கு நல்வரவு
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி
கிரிவலம் காணொளிகளை முன்பே பார்த்தேன், உங்கள் தளத்திலும் கண்டு மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குமக்கள் பெரும்திரளாக வலம் வருவது அருமை.
கருவூரார் திருப்பதிகம் பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
சித்தர்களின் அருள் கிடைக்கட்டும். அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தையும், மன நிம்மதியை , மன குறை அகன்று மன நிறைவை தர பிரார்த்திக்கிறேன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி நன்றி..
எவ்வித வரலாறும் தெரியாத மனிதர்களை நிருபர்களாக்குவதும், அதேபோல எந்த விதமான இதைப் பற்றிய விவரங்களும் அறியாதவர்களை ஊடகங்களில் பணியமத்துவதும் இப்படிப்பட்ட ஒரு பொறுப்பற்ற தகவல்களை அளிப்பதற்கு வழி வகுக்கிறது. நிருபர்கள் தரும் அரைகுறை தகவல்களை ஆராயாமல் அப்படியே வெளியிட்டு விடுகிறார்கள்.
பதிலளிநீக்குதங்கள் சொல்வது உண்மையே
நீக்குகாணொளிகள் பார்த்தேன் .சுவாரஸ்யம். முதல் காணொளியில் படா உயரமாக ஒருவர் நிற்கிறார். அவருக்கு பின் கிட்டத்தட்ட அதே உயரத்தில் ஒருவர் இருக்கிறார். அவரைப் பார்த்தால் அத்வானி சாயலில் இருக்கிறார்!!
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தஞ்சை பெரிய கோவிலிலும், கிரிவலம் என்ற செய்தியறிந்தேன். திருவண்ணாமலையில்தான் கிரிவலம் என நினைத்திருந்தேன். சிவபெருமானை மனதாற நினைத்து கோவில் சுற்றி வந்தாலே அது நல்ல செயல்தானே ..! " நாம் என்றும் இறைவனை மறவாதிருக்கும் வரம் வேண்டும். இறைவனும் நம்மை மறவாவல் இருந்து தன்னருளை நமக்குத் தர வேண்டும்." இது ஒன்றுதான் நான் எந்த கோவிலுக்குப் போனாலும், பிரார்த்திப்பது.
காணொளிகள் நன்றாக உள்ளது. இறைவனருளால் கிரிவலம் வருபவர்களை கண்டு வணங்கினேன் . பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி.. நன்றி
துரை அண்ணா காணொளிகள் எல்லாம் பார்த்தேன். மக்கள் பெருவெள்ளம், பெண்ககள் சங்கு ஊதுவது, மேளம் என்று அசத்தல்.
பதிலளிநீக்குஅண்ணா தினமலர் என்ன எந்த ஊடகத்திலும் நல்ல விஷயம் தெரிந்தவர்கள் இல்லை, நல்ல அறிவுடைய்வர்கள் செய்திகளைச் சரியாகச் சொல்பவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
கீதா
உண்மை தான்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி சகோ
கிரிவலம் பற்றிய விளக்கங்கள் கேட்டோம்.
பதிலளிநீக்குதஞ்சை கிரிவலம் கண்டு வணங்கினோம்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி மாதேவி
தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம் - தகவல்கள் அறிந்தேன். காணொளிகள் கண்டேன். மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றி.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்