நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 3
வியாழக்கிழமை
சோயா பீன்ஸ்
இதய ஆரோக்கியம் காக்கின்ற தானியம்...
மொச்சை வகையைச் சேர்ந்தது..
சைவ உணவை மட்டுமே உண்பவர்களுக்கு, சோயா பீன்ஸ் சந்தேகத்திற்கு இடமின்றி அதிக அளவு புரதத்தை வழங்குகிறது.
மேலும், சோயாவில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் உள்ளன.
சோயா பீன்ஸ் முழுமையான புரத ஆதாரமாக அமைகிறது.. நமது உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களை சோயா உற்பத்தி செய்கிறது..
சோயா பீன்ஸின் புரதத்தை புலால் உணவுடன் ஒப்பிடும் போது, சோயாவில் கொலஸ்ட்ரால் அளவு குறைவாக உள்ளது. இது நார்ச்சத்து நிறைந்தது மேலும், எலும்புகளை வலுப்படுத்துகின்றது.
சோயா பீன்ஸில் உள்ள புரோட்டீன் நமது இதயத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது.
இது நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வுகளில் சோயாவின் புரதத்தால் கெட்ட கொழுப்புகள், ட்ரை கிளிசரைடு கொழுப்புகள் இரத்தத்தில் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது..
தகவல் தொகுப்பு : நன்றி விக்கி
குவைத்தில் இருந்த போது எத்தனையோ நாள் சோயா பீன்ஸ் எனது சமையலில் இடம் பெற்றிருக்கின்றது..
இத்தனை நலங்களும் சோயா பீன்ஸையும் அதன் என்ணெயையும் பயன்படுத்துகின்ற போது தான்..
எதற்கும் உதவாத சோயா பீன்ஸின் சக்கையை உணவுப் பொருள் என்று பயன்படுத்தும் போது?...
இன்றைக்கு Veg Mutton என்றும் Veg Chicken
என்றும் உணவு வியாபாரிகளிடம் புழங்குவது சோயா பீன்ஸின் சக்கை தான்..
நல்லவேளை...
வேறு விதங்களில் வேஷம் கட்டப்பட வில்லை சோயா சக்கைக்கு!..
சோயா சக்கை மனிதருக்கு நல்லதா...
கெட்டதா?..
நலம் தருமா?..
நலிவைத் தருமா?..
இன்று வரை உறுதி செய்யப்படவில்லை..
தொடர்ந்து வேறொரு பதிவில் இதனைக் காண்போம்..
நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
இயற்கையே இறைவன்
இறைவனே
இயற்கையே
***
ஆஹா... எங்கள் வீட்டிலும் இளையவன் சோயா (சக்கை?) ரசிகன். அதை வெந்நீரில் ஊறவைத்து துண்டுகளாக்கி வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து வதக்கி சாப்பிடுவான். எனக்கு அதன் மணம் பிடிப்பதில்லை!
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் விவரமான கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
சோயா பீன்ஸ் விவரங்கள் அருமை.
பதிலளிநீக்குபடங்கள் அழகு.
சோயா பால், சோயா உருண்டை என்று உணவில் பயன்படுத்துவது இங்கு உண்டு.
தங்கள் அன்பின் வருகையும் மெர்ல் விவரக் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி
தகவல்கள் பயனுள்ள சிறப்பு ஜி
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி
சோயா குறித்த தகவல்கள் நன்று. சோயா chunks வைத்து வடக்கில் சில சப்ஜிகள் செய்வார்கள். சுவை நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் மேல் விவரமும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்
சோயா குறித்த தகவல்கள் நன்று. சோயா பால்ஸ் கிடைக்கின்றதே அதை அசைவம் சாப்பிடாதவர்களில் சிலர் பயன்படுத்துகிறார்கள் ஆனால் சிலர் அதுவும் ஒரு அசைவம் போன்ற ஒரு தன்மையைக் கொடுக்கிறது என்று பயன்படுத்துவதில்லை.
பதிலளிநீக்குதுளசிதரன்
தாங்கள் சொல்வதும் உண்மை தான்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி துளசி
சோயா மிகவும் நலல்துதான் துரை அண்ணா, தகவல்கள் பயனுள்ளவை. அதுவும் மற்ற புரதமும் நலல்துதான் கெட்டக் கொழுப்பை அகற்றி நல்ல கொழுப்பை வளர்க்க உதவும்தான்.
பதிலளிநீக்குகூடவே இன்னொரு பயமும் வருதே துரை அண்ணா. இந்தப் புரதத்தை சிறுநீரகம் பிரச்சனையானா சரியா ரத்தத்தில் கலக்காமல் சிறுநீரில் தள்ளிவிட்டுவிடுமாம்...சிறுநீர் நுரைத்துப் போனால் சிறுநீரகம் பிரச்சனையா என்று பார்க்கணுமாம். புரதம் சாப்பிடும் தினங்களில் அப்படி நடந்தாலும் தொடர்ந்து போனால் பார்க்கணுமாம்
என்னவோ போங்க. நல்லது சாப்பிடுங்க சாப்பிடுங்க என்று ஒரு புறம் மற்றொரு புறம் அதுக்கு ஒரு ஆப்பு! இப்படிச் சொல்லும் போது சாப்பிடுவதா வேண்டாமா என்று ஒரே குயப்பமா இருக்கு! ஹாஹாஹாஹா...ஏன்னா எனக்குப் புரதம் சாப்பிடணும்னு அறிவுரை சர்க்கரையை சரியா வைச்சுக்க....ஆனா கூடவே இந்த ஒரு எச்சரிக்கையும்.
கீதா
சோயா பற்றிய நல்ல தகவல்கள்.
பதிலளிநீக்குநமது நாட்டில் சோயா உற்பத்தி உணவுகளுக்கு பால் , சிற்றுண்டிகள் ஐஸ்கிறீம் ,டோபு விற்பனைசெய்யும் கடை இருந்தது.
நாங்கள்சோயா டோபு , உலரவைத்த சோயா (சக்கை) இரண்டுமே சமைப்பதுண்டு.
தங்கள் அன்பின் வருகையும் மேல் விவரக் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி மாதேவி
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்களில் சோயா பீன்ஸை கண்டு கொண்டேன். சோயா பற்றிய தகவல்கள் நன்று. இதைதான் மஞ்சள்/ வெள்ளை காராமணி எனபோமோ? இது வாயுவை ஏற்படுத்தும் என்ற ஐயத்தில் (மொச்சையுந்தான்) இந்த வகைகளை நாங்கள் உணவில் சேர்ப்பதில்லை. இந்த ஊரில் மொச்சையைத்தான் அவரைக்காய் என்கிறார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி