செவ்வாய், செப்டம்பர் 10, 2024

ஸ்ரீவைகுண்டம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 25
செவ்வாய்க்கிழமை


ஸ்ரீவைகுண்டம்..

மூலவர்: 
ஸ்ரீ வைகுந்தநாதன்
உற்சவர்: கள்ளபிரான், 
தாயார்:
ஸ்ரீ வைகுண்டவல்லி, ஸ்ரீ பூதேவி நாச்சியார்

தீர்த்தம்:பிருகு தீர்த்தம், தாமிரபரணி 
தல விருட்சம் பவளமல்லி

சந்திர விமானத்தின் கீழ், ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு திருக்கரங்களுடன்,  நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கின்றார்...

ஆவணி இரண்டாவது வாரம் புதன் கிழமை பிற்பகல்..

நாங்கள் ஸ்ரீ வைகுண்டம் கோயிலுக்குச் சென்ற போது மாலை மணி நான்கு..

எக்காலத்தும் சந்தனக் காப்புடன் திகழ்கின்ற ஸ்ரீ கருடாழ்வார் இத்தலத்தில் சிறப்பு

இத்தலம் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகவும் நவதிருப்பதிகளில் இத்தலம் சூரியனுக்கு உரியதாகத் திகழ்கின்றது..

இக்கோயிலில் ராஜ கோபுரத்தை  அடுத்திருக்கின்ற திருவேங்கடமுடையான் சந்நிதியின் முன் மண்டபம் கலைக் களஞ்சியம்.. 

நேரில் காணும் போது தான் அந்த மண்டபம் பராமரிக்கப்பட்டுகின்ற அழகு புரியும்..

நாயக்கர் காலத்தைச் சேர்ந்த அற்புதமான சிற்பங்கள் அணி செய்கின்றன.. 

திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி சாலையில் 31 கிமீ..  

கோயிலுக்கு அருகிலேயே பேருந்து நிலையம்..

இங்கும் ஐந்து மணிக்குத் தான் நடை திறப்பு. மேக மூட்டத்துடன் விரைவாக இருள் சூழ்ந்து கொண்டது..
.திருவேங்கடமுடையான் மண்டபத்தில் மங்கலான மின் விளக்குகள்..

பிரம்மாண்டமான கோயில் ..
பெரிய பெரிய மண்டபங்கள்..
மங்கலான மின் விளக்குகள்..

மேற்கொண்டு 
நீங்களே கற்பனை செய்து கொள்ளவும்..

முன்னிரவுப் போதில் உறியடி வைபவம்.. கள்ளர் பிரான் தேவியருடன் திருவீதி எழுந்தருளினார்..  

மனதாரத் தொழுது  வணங்கி விட்டு  திருநெல்வேலியை வந்தடைந்தோம்..

நவ கயிலாயத் தலங்களுள் ஒன்றாகவும் திகழ்கின்றது ஸ்ரீ வைகுண்டம்....





















நாரணன் தமரைக் கண்டுஉகந்து  நல்நீர்முகில்
பூரண பொன்குடம்  பூரித்தது உயர்விண்ணில்
நீரணி கடல்கள்  நின்றுஆர்த்தன  நெடுவரைத்
தோரணம் நிரைத்து  எங்கும் தொழுதனர்உலகே 3872

தொழுதனர் உலகர்கள்  தூபநல் மலர்மழை
பொழிவனர் பூமிஅன்று அளந்தவன் தமர்முன்னே
எழுமின்என்று இருமருங்குஇசைத்தனர்  முனிவர்கள்
வழிஇது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே.. 3873
-: ஸ்ரீ நம்மாழ்வார் :-
 நன்றி 
நாலாயிரத் திவ்யப்ரபந்தம்

ஓம் ஹரி ஓம் 
***

14 கருத்துகள்:

  1. நாலயிரத் திவ்யப்ரபந்த பாடலை பாடி ஸ்ரீ வைகுண்டம் கோவிலை தரிசனம் செய்து கள்ளபிரானை வணங்கி கொண்டோம்.
    படங்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. ஓம் நமோ நாராயணாய

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  2. ஶ்ரீவைகுண்டம் கோயிலுக்குப் பலப் பல தடவைகள் சென்று தரிசனம் செய்ததை நினைவுபடுத்திவிட்டீர்கள்.

    பாசுரம், அந்தக் கோவிலுக்கானது இல்லை. நம்மாழ்வார் மோட்சமடைவதற்கு முன், வானுலகம் எப்படி இருந்தது என நமக்குக் காட்டிய பாசுரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் நமோ நாராயணாய..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  3. கோவில் பற்றிய விவரங்களும் படங்களும் அருமை, சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் நமோ நாராயணாய..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. ஸ்ரீவைகுண்டம் கோவில் சென்றிருக்கிறேன் ஆனால் பல வருடங்களுக்கு முன். அப்போதெல்லாம் இந்தச் சிற்பங்களைப் பார்த்து நின்று ரசிக்க முடியவில்லை வீட்டுக் கும்பலோடு போனதால் அவசரப்படுத்தி அழைத்துக் கொண்டு வந்துவிடுவார்கள்.

    படங்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றன, துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அப்போதெல்லாம் இந்தச் சிற்பங்களைப் பார்த்து நின்று ரசிக்க முடியவில்லை வீட்டுக் கும்பலோடு போனதால் அவசரப்படுத்தி அழைத்துக் கொண்டு வந்துவிடுவார்கள்.///

      ஆ..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  5. ஸ்ரீவைகுண்ட கோவில் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்..

    சிற்பங்களின் அழகைப்பற்றி விபரித்துள்ளீர்கள். படங்களில் கண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தி. லியிலேயே இருந்தும் ஸ்ரீவைகுண்டம் இது வரை போனதில்லை. தங்கள் பதிவினால் சிறப்பான தரிசனங்கள் கிடைத்தது. படங்கள் அனைத்தும் மிக அழகாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். தங்களுக்கு கோவில் தரிசனங்கள் நன்றாக கிடைத்தமைக்கு இறைவனுக்கு மனமார்ந்த நன்றி. பகிர்வுக்கு உங்களுக்கும் மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      மிக்க நன்றி

      நீக்கு
  7. ஆலயம் குறித்த தகவல்கள் சிறப்பு. ஸ்ரீ வைகுண்டம் - நிழற்படங்கள் நன்று. சிற்பங்கள் மனதைக் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..