புதன், செப்டம்பர் 04, 2024

அழைத்தவர் குரல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 19
புதன்கிழமை


கோயிலில் கொடை விழா நடத்த முடியாவிட்டால் என்ன!.... நாம் நமது இருப்பிடத்தில் அம்மனை அழைத்து நடத்திக் கொள்வோம்!..  - என  மக்கள் முடிவெடுத்து சீர்வரிசை வாண வேடிக்கை செண்டை மேளங்களுடன் திருக்கோயிலை வலம் செய்து வணங்கி அவரவர் தெருவிலேயே அம்பிகையை அழைத்து பொங்கல் இட்டு வழிபட்டனர்..










ஆவேசத்துடன் ஓடி வந்த அம்மை அடியார்க்கு அபயம் வழங்கி அருள்வாக்கும் அளித்து மலையேறினாள்..

நானும்  என் மனைவியும் மகனும் அக்ரஹாரத்தில் நடத்தப்பட்ட விசேஷத்தில் கலந்து கொண்டோம்..

சாம்பார் சாதம் அனைவருக்கும்
பிரசாதமாக வழங்கப்பட்டது..



பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே.. 77
-: அபிராமி அந்தாதி :-

ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. அரசன் கட்டிய கோவிலுக்கு தன்னால் வரை இயலாது என்று இறைவன் சொன்னாராம்.  ஏன் என்று கேட்டதற்கு அன்றுதான் தன் பக்தன் ஒருவனும் தான் கட்டிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் வைத்திருப்பதாய் சொன்னானாம், இறைவன்,  பக்தன் அந்தக் கோவிலை தன் மனதில் கட்டியிருந்தானாம்.  அதுபோல அரசாங்கம் தடுத்தால் என்ன, மக்கள் தத்தங்கள் தெருவில் அம்மனை அழைத்து வழிபாட்டு அருள்பெற்றது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இதைத்தான் நினைத்துக் கொண்டேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம் ..

      நீக்கு
  2. தகவல்கள் சிறப்பு. படங்களும் நன்று. மக்கள் இப்படிச் செய்வதும் நல்லதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் நல்லதற்கே..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட் ..

      நீக்கு
  3. அபிராமி அம்மன் பாடலை பாடி அம்மனை வணங்கி கொண்டேன்.
    படங்கள், விவரங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  4. அகிலாழும் தாயே சரணம் .

    அம்மன் அலங்காரம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..