சனி, ஆகஸ்ட் 10, 2024

பாதயாத்திரை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 25
சனிக்கிழமை


தஞ்சையில் அறுபடைவீடு..

நாளை ஆடி கடை ஞாயிறு..

ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைஞாயிறன்று   தஞ்சையில் உள்ள  முருகன் கோயில்களில்
ஆறினை அறுபடை வீடு என பாவித்து - பாத யாத்திரையாய் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 
வழிபடுகின்றனர்..

ஞாயிறன்று காலையில்
தஞ்சை பெரிய கோயில் முருகன் சந்நிதியில் இருந்து புறப்படுகின்ற குழுவினரோடு வழிநெடுக மக்கள் சேர்ந்து கொள்வர்..


முதல் கோயில்

மேல அலங்கம் 
ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோயில்..

ஸ்ரீ வள்ளி தெய்வ யானையுடன் திருக்காட்சி..

சிறிய கட்டுமலைக் கோயில்.. 
கீழ்தளத்தில் மேலவாசல் ரங்கநாதர்.. இக்கோயிலுக்குப் பக்கத்தில் மேலவாசல் பத்ரகாளியம்மன் கோயில்..

இங்கே தரிசனம் முடிந்ததும் ராஜ ராஜ சமய சங்கத்தில் பக்தர்கள் அனைவருக்கும் காலை உணவு.. விருந்து உபசரிப்பு..


இரண்டாவது கோயில்

வடக்கு அலங்கம்
ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோயில்..

மேற்கு நோக்கிய கோயில்..  பங்குனியில் மூன்று நாட்கள் மாலைப் பொழுதில் சூரிய பூஜை சிறப்பு..

மன்னர் சரபோஜி காலத்தில் பழனி மலையில் இருந்து கல் கொணர்ந்து வடிக்கப் பெற்ற திருமேனியாகும் .. 


மூன்றாவதான கோயில் 

கீழவாசல்
குறிச்சித் தெரு 
ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோயில்.. 

ஸ்ரீ வள்ளி தெய்வ யானையுடன் திருக்காட்சி..

இங்கே தரிசனம் முடிந்ததும் கீழவாசல் வர்த்த சங்கத்தினரால் கீழவாசல் கல்யாண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பேருக்கு மதிய விருந்து.. அன்னதானம்

மதிய உணவுக்குப் பிறகு பாத யாத்திரை தொடர்கின்றது..


நான்காவது கோயில்

கீழவாசல்
ஆட்டு மந்தைத்தெரு 
ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி கோயில்..

மேற்கு நோக்கிய கோயிலாகும் இது..


ஐந்தாவது கோயில்

கீழவாசல்
சின்ன அரிசிக்காரத் தெரு 
ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோவில்..

இதுவும் மேற்கு நோக்கிய கோயிலாகும்.. 

இக்கோயிலில் மூலஸ்தானத்தில் யானை வாகனம்..

இங்கே தரிசனம் செய்து விட்டு மகர் நோன்புச் சாவடியைக் கடக்கின்ற பக்தர்களை சௌராஷ்டிர பக்த சபையினர்  சிற்றுண்டியுடன் வரவேற்கின்றனர்...


ஆறாவது கோயில்

பூச்சந்தை - பூக்காரத் தெரு
ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோயில்..

மூலஸ்தானத்தில் இருக்கின்ற  ஸ்ரீ வள்ளி தேவசேனாவுடன் கூடிய முருகன் திருமேனி
திருச்செந்தூரில் இருந்து தஞ்சைக்கு வந்ததாகும்..

கோயிலின்  நேர் எதிரில் 200 மீட்டர் தொலைவில் புதுஆறு.

கந்தசஷ்டி தீர்த்தவாரி இங்கு தான் நிகழும்..

பாத யாத்திரையின் நிறைவாக பூச்சந்தை வர்த்தகர்களால் இக்கோயிலில் மாலை உணவு..

பதிவிலுள்ள ஆறு கோயில்களின் முருகன் படங்களுக்கும் நன்றி - தஞ்சையின் பெருமை Fb

இருப்பினும் -
பெரிய கோயிலின் முருகன் சந்நிதியில் பாத யாத்திரையை நிறைவு செய்கின்ற பக்தர்களும் உள்ளனர்..

இந்த பாத யாத்திரையை - கோயில்களை - ஆறுபடை வீடுகளுடன் ஒப்பிட்டு நெகிழ்வர்

இந்த பாத யாத்திரை தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கோயிலில் இருந்த துறவி ஒருவரது அறிவுரையின்படி தனம்மாள் என்பவரால்  தொடங்கப்பட்டது என்பதாக செவிவழிச் செய்திகள்...

பாத யாத்திரையாய் வருகின்ற பக்தர்களை வழிநெடுக மக்கள உபசரிக்கின்ற மாண்பு குறிப்பிடத்தக்கது...

முழங்காலில் வலி குறையாத போதும் இந்த வருடம் பாத யாத்திரையில் செல்வதற்கு இருந்தேன்.. இந்த நாளில் தான் - எங்கள் உறவு முறையின் ஸ்ரீ கருப்ப ஸ்வாமி கோயிலில் வருடாந்திர பூஜை.. 

முருகன் அருள் எங்கும்  எப்போதும் உடன் நிற்பதாக..

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தா குலமானவை தீர்த்து எனையாள்
கந்தா கதிர் வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.. 46
கந்தரநுபூதி
-: அருணகிரிநாதர் :-

முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. முருகா வா செந்தில் முதல்வா வா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. தெய்வானையை தெய்வ யானை என்று பிரித்ததும், வள்ளி தேவசேனா என்பதும் குழப்புகிறது. கந்தன், தேவசேனாபதியா இல்லை தேவசேனாவின் பதியா என்பதிலும் குழப்பம்.

    மற்றபடி பதிவு சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவசேனாதிபதி என்பது தனி..

      தேவயானை என்பதும் தெய்வானை என்பதும் ஒன்று தான்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி நெல்லை..

      நீக்கு
  3. ஆறுபடைவீடு பாதயாத்திரை கண்டோம்.

    முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி மாதேவி..

      நீக்கு
  4. ஆறுபடைவீடு பாதயாத்திரை கண்டோம்.

    முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
  5. பாத யாத்திரை விவரம் அருமை.
    கந்தரநுபூதி பாடலை முருகனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி..

      நீக்கு
  6. விவரங்கள் அனைத்தும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி வெங்கட்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..