புதன், மார்ச் 27, 2024

ஜனன விழா

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 14
புதன் கிழமை


கடந்த திங்களன்று (18/9) திரு ஐயாறு - அந்தணக்குறிச்சியில் நந்தியம்பெருமான் ஜனன வைபவம் நடைபெற்றது.. 

இத்தனை வருடங்களில் இந்த ஆண்டு தான் தரிசிக்கின்ற பாக்கியம் கிடைத்தது..

திரு ஐயாறு கோயிலில் இருந்து ஒரு கிமீ தொலைவில் அந்தணக் குறிச்சி.. 

அங்கு ஸ்ரீ ரிஷி நந்தி விநாயகர் கோயில்.. அக்கோயிலின் குளக் கரையில் தான் சிலாத முனிவருக்கு நந்தீச்ன் மகவாகப் பூமியில் இருந்து கிடைத்ததாக ஐதீகம்.. நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்..

திரு ஐயாறு ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும்  எழுந்தருளியிருக்க ஜனனமான குழந்தையை ஸ்வாமி அம்பாளிடம் காட்டினர்.. 

அந்த நேரத்திலேயே நந்தீசன் பெரியவன் ஆனதால் ரிஷி நந்தி விநாயகர் கோயிலில் எழுந்தருளி திருக்காட்சி நல்க -  மகா தீப ஆராதனை நடந்தது.. 

அவ்வூர் மக்கள் வீட்டுக்கு வீடு ஸ்வாமிக்கு சிறப்பு செய்து மகிழ்ந்தனர்.. 

சிறப்பாக இட்லி கேசரி காபியுடன் சித்ரான்னங்கள் வழங்கப் பெற்றது.. 
நமக்குத் தான் எதுவும் ஆகாதே..

காஃபியை மட்டும் பெற்றுக் கொண்டேன்..

படங்கள் : தஞ்சையம்பதி..





















மதில் மீது ஏறிக் கொண்டு தரிசனம் செய்த செல்லம்..
 




 கீழுள்ள படங்களுக்கு நன்றி
சிவகணங்கள்..




நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்து
பொங்கு நீடருள் எய்திய பொற்பது
கங்கை வேணி மலரக் கனல்மலர்
செங்கையாளர் ஐயாறுந் திகழ்வது.. 45
(பாயிரம் பெரிய புராணம்)
-: சேக்கிழார் :-

நந்தீசர் திருத்தாள் போற்றி..
ஐயாறப்பர் 
அறம் வளர்த்த நாயகி திருவடிகள் போற்றி போற்றி..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

3 கருத்துகள்:

  1. படங்களும் தகவல்களும் நன்று. தொடரட்டும் பக்தி உலா.

    பதிலளிநீக்கு
  2. நந்தீசன் பெருமான் ஜனன விழா காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன.

    உங்கள் தரிசனத்தில் நாமும் கண்டுவணங்கிக் கொண்டோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு.
    நந்தியம்பெருமான் திருமண விழா படங்கள் பகிர்வு நேரில் கலந்து கொண்ட உணர்வை தந்தது.
    மதில் மேல் நின்று செல்லம் பார்த்த படம் அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..