செவ்வாய், பிப்ரவரி 27, 2024

ஆலிவ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 15
செவ்வாய்க்கிழமை


அரபு நாடுகளிலும் மத்திய தரைக் கடல் 
நாடுகளிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது ஆலிவ்..

அரபு மொழியில் ஜெய்த்தூன் எனப்படுகின்றது..

ஆலிவ் எண்ணெய் உற்பத்தியில் ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம் ஆகிய மூன்று நாடுகள் உலகளவில் முதல் மூன்று இடத்தை வகிக்கின்றன என்று விக்கி சொல்கின்றது..


ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது அதிகளவு நன்மை பயக்கும் நுண்மங்களைக் கொண்டுள்ளது..


ஆலிவ் எண்ணெய்  மூளையைப் பாதுகாத்து பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றது - என ஆய்வுகள் கூறுகின்றன..


ஆலிவ் எண்ணெய் இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைத்து  இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றது.

ஆலிவ் எண்ணெய்  கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகின்றது..இதயத்திற்கு ஏற்ற எண்ணெயாகவும் இருக்கின்றது..

ஆலிவ் எண்ணெயில் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

ஆலிவ் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்  
மற்றும் வைட்டமின் ஈ  உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது..  

ஆலிவ் எண்ணெய்  செரிமான மண்டலத்தை மேம்படுத்துகின்றது..

மேலும் பல  பிரச்னைகளில் இருந்து உடலைப் பாதுகாக்கின்றது..


பத்து ஆண்டுகளுக்கு மேல் குவைத் நாட்டில் உணவகப் பொறுப்பாளராக பணி செய்த எனக்கு ஆலிவ்  பழக்கப்பட்ட ஒன்று..  ஆலிவ் எண்ணெய் மிகவும் பிடித்தமான ஒன்று..


அரபு உணவகங்களில் Salad களை  ஆலிவ் காய்கள் கொண்டு அலங்கரிப்பர்.. Salad களிலும் ஆலிவ் எண்ணெய் Dressing  என்று சேர்க்கப்படும்.. 


காலையில் ரொட்டிக்குத் துணையாகும் ஹூமூஸ் (கொண்டைக்கடலை) சட்னியிலும் Foul Medamus (பீன்ஸ் வகை) சட்னியிலும் ஆலிவ் எண்ணெயின் பங்கு இன்றியமையாதது..

பொதுவாக அங்கே ஆலிவ் எண்ணெய் சூடாக்கப்படுவதில்லை.. 

Cold kitchen எனப்படும் Salad பிரிவில் காய்கறிக் கலவையில் நேரடியாக சேர்க்கப்படுவது.. 

உணவு மேஜையிலும் நேரடிப் பயன்பாட்டிற்கு ஆயத்தமாக இருக்கும்..

இங்கே ஆலிவ் எண்ணெயில் வடை சுட்டு எடுப்பது போலக் காட்டுகின்றனர்..

ஆலிவ் காய்கள் சற்றே கசப்பும் துவர்ப்புமாக இருக்கும்.. பச்சை கறுப்பு என இரண்டு ரகங்கள் தான் அதிக பயன்பாட்டில் உள்ளவை.. வேறு ரகங்களும் இருக்கலாம்..

பச்சை நிற ஆலிவ் காய்களில் உள்ளவை : 
நீர்  78.85%
புரோட்டீன் 1.08% 
கார்போஹைட்ரேட் 4.02% 
நல்ல கொழுப்பு 16.05% 

100 கிராம் ஆலிவ் எண்ணெயில் 
Saturated fat (நல்ல கொழுப்பு) 14 g  70% என்று அறியப்பட்டுள்ளது..

இன்றைய சூழலில் இங்கே கண்ணெதிரே விளைகின்ற பாரம்பரிய எண்ணெய் வித்துகளில் இருந்து எந்த ஒரு நற்பயனும் நமக்கு முறையாகக் கிடைப்பதில்லை.. 

இவ்வித சூழ்நிலையில்
இங்கு  நல்லதொரு தரத்தில் ஆலிவ் எண்ணெய் கிடைக்கின்றது என்பதை அவரவர்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்
நாளும் வாழ்க
நன்றென வாழ்க..

ஓம் சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. ​சுவாரஸ்யமான, உபயோகமான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஆலிவ் எண்ணெய் தான் வெளி நாட்டில் சமைக்க பயன் படுத்துகிறார்கள்.
    அதன் பயன்பாடு, மற்றும் பயன்படுத்தும் முறை பற்றி சொன்னது
    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலமுடன்..

      நீக்கு
  3. நம்ம நாட்டின் பாரம்பர்ய எண்ணெய்களான, தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலெண்ணைல சத்து இல்லையா? எதுக்கு கிரேக்க ஆலிவ் உபயோகிக்கணும்? அந்த அந்த நிலத்து உணவு, அந்த அந்த நிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு நல்லது. வம்படியா நாம வெளிநாட்டு எண்ணெய், சோளம் போன்ற உணவுகள்லாம் எதுக்குச் சாப்பிடணும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// வம்படியா நாம வெளிநாட்டு எண்ணெய், சோளம் போன்ற உணவுகள்லாம் எதுக்குச் சாப்பிடணும்?///

      அதிலுள்ள சிறப்புகளைச் சொன்னேன்..

      மற்றபடி யயாதொன்றும் இல்லை..

      நெல்ல்லை அவர்களது
      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஆலிவ் எண்ணெய் குறித்த தகவல்களுடன் பதிவு அருமை.அதன் விபரம் குறித்த படங்களும் அழகு. இப்போது நம் நாட்டிலும் ஆலிவ் எண்ணெயை சமையலுக்காக பயன்படுத்துவது நிறைய வந்து விட்டது.

    /பத்து ஆண்டுகளுக்கு மேல் குவைத் நாட்டில் உணவகப் பொறுப்பாளராக பணி செய்த எனக்கு ஆலிவ் பழக்கப்பட்ட ஒன்று.. ஆலிவ் எண்ணெய் மிகவும் பிடித்தமான ஒன்று../

    நீங்கள் ஆலிவ் எண்ணெய்யை அங்கு நிறைய பயன்படுத்திய தகவலை பற்றி தெரிந்து கொண்டேன். நல்லதை நல்லபடியாக உடலுக்கு ஒத்து வருவதை பயன்படுத்தலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு நம்முடைய சூழலுக்கு ஒத்து வருகின்ற எண்ணெய் வகைகளே போதும் ..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  5. ஆலிவ் எண்ணையின் சிறப்புகள் பற்றி நன்றாக தந்துள்ளீர்கள். நாங்களும் ஆலிவ் எண்ணை சலட் , சோட்டே, வகைகளில் பயன்படுத்துகின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலிவ் எண்ணெயை சுட வைத்து நான் பார்த்ததில்லை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..

      நீக்கு
  6. ஆலிவ் எண்ணை பற்றிய தகவல்கள் நன்று. ஆனால் வீட்டில் தேங்காய் எண்ணை தான் பயன்படுத்துவதுண்டு. சமீபத்தில் துபாய் சென்றிருந்த போது அங்கு அரபு உணவு சாப்பிட்ட இடத்தில் ஆலிவ் எண்ணை பயன்படுத்தியிருந்தார்கள் என்று சொல்லப்பட்டது. நாங்கள் சாப்பிட்ட கேரளத்து உணவகங்களில் அப்படி இல்லை என்று தோன்றியது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // துபாய் சென்றிருந்த போது அங்கு அரபு உணவு சாப்பிட்ட இடத்தில்.. ///

      ஆலிவ் எண்ணெய் பயன்ப்டுத்தாத அரபு உணவக ங்கள் இல்லை எனலாம்..

      /// கேரளத்து உணவகங்களில் அப்படி இல்லை என்று தோன்றியது..///

      குவைத்தில் கேரள உணவகங்களுக்குச் சென்றதில்லை..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  7. ஆலிவ் கறுப்பு வகை பச்சை வகை இங்கு நம்மூரில் Pizza வில் பயன்படுத்துகிறார்கள். ஆலிவ் எண்ணையும் உடம்புக்கு நல்லதுதான். அதைப் பற்றிய தகவல்கள் மிக நன்று. மேற்கத்திய உணவுகளுக்கு அது சரியாகும். நம் ஊர் உணவுகளுக்கு அது சரியாகாது என்று நினைக்கிறேன்.

    இரண்டாவது அதன் விலையும் ரொம்ப கூடுதல். சிலர் edible virgin எண்ணை வாங்கி தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிடுவது நன்மை பயக்கிறது என்று சொல்றாங்க. ஆனால் நான் அந்தப் பரீட்சாத்தங்களின் பக்கம் செல்வதில்லை. நல்லெண்ணை, தேங்காய் எண்ணை இருக்க வேறு என்ன வேண்டும் அளவாகப் பயன்படுத்தும் போது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்து சிறப்பு..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ஆலிவ் குறித்த மேலதிகத் தகவல்கள் மிகவும் சிறப்பு. பல தகவல்கள் புதிதாக தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..