நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 11
வெள்ளிக்கிழமை
தனன தனதன தனன தனதன
தனன தனதன ... தனதான
குமர குருபர முருக சரவண
குகசண் முககரி ... பிறகான
குழக சிவசுத சிவய நமவென
குரவ நருள்குரு ... மணியேயென்
றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென அநுதின ... முனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுர ... லறியாயோ..
திமிர எழுகட லுலக முறிபட
திசைகள் பொடிபட ... வருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு ... மயில்வீரா
நமனை யுயிர்கொளு மழலி நிணைகழல்
நதிகொள் சடையினர் ... குருநாதா
நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
குமரா குருபரா முருகா
சரவணா குகா சண்முகா
கரிமுகக் கணபதிக்கு இளையவனே
சிவசக்தி திருமகனே
சிவாய நம என்னும் பஞ்சாட்சரத்திற்குரிய
சிவபெருமான் அருளிய குருமணியே
என்றெல்லாம்
அமிர்தத்திற்காகக கடலைக்
கடைந்தபோது தேவர்கள் எழுப்பிய
ஓசையைப் போல
உன்னை நாள்தோறும் வாயாரப் பாடி
ஆரவாரத்துடன் துதிக்கின்ற
அடியார்கள் தமது
கொடிய வினைகள் நீங்குவதற்காக
அபயம் என்று ஓலமிடும் குரல்
உனக்குக் கேட்கவில்லையோ?..
ஏழு கடல்களும்
உலகங்களும் அழியவும்
எட்டுத் திசைகளும் பொடி படவும்
போருக்கு வந்த அசுரர் தலையும்
உடலும் பூமியில் விழுமாறு
அவர்களது உயிரைக் கவர்ந்து போரிட்ட
வேலனே வீரனே..
யமனின் உயிரை எடுத்த நெருப்பைப்
போன்ற திருவடியும்
கங்கையைத் தாங்கிய
சடைமுடியும் உடைய
சிவபெருமானின் குருநாதனே
எழில்மிகு சுவாமிமலைதனில் அமர்ந்தவனே
வேதங்கள் புகழ்கின்ற பெருமாளே..
**
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள், அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல், அதன் அருமையான விளக்கம் என பதிவு நன்றாக உள்ளது.
அழகான அருள் தரும் முருகனை சரணடைந்தேன். முருகா சரணம்.
முத்துக் குமரா சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
குமரா குருபரா உன்பாதம் சரணடைகின்றோம்.
பதிலளிநீக்குஅழகிய படங்களுடன் பகிர்வு கண்டு மகிழ்ந்தோம்.
எல்லாம் வல்ல இறைவனின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திட எனது பிரார்த்தனைகளும்...
பதிலளிநீக்குகுமரகுருபர முருகன் அனைவருக்கும் நல்லருள் வழங்க வேண்டும். திருப்புகழை பாடி முருகனை வேண்டிக் கொண்டேன்.
பதிலளிநீக்கு