நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 26
வெள்ளிக்கிழமை
திருப்புகழ்
திருமயிலை
தனனத் தனதன ... தனதான
அயிலொத் தெழுமிரு ... விழியாலே
அமுதொத் திடுமரு ... மொழியாலே
சயிலத் தெழுதுணை ... முலையாலே
தடையுற் றடியனு ... மடிவேனோ
கயிலைப் பதியரன் ... முருகோனே
கடலக் கரைதிரை ... யருகேசூழ்
மயிலைப் பதிதனி ... லுறைவோனே
மகிமைக் கடியவர் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
வேலினை ஒத்துள்ள
இரு விழிகளாலும்
அமுதத்தை ஒத்துள்ள
இனிய மொழிகளாலும்
மலைகளை ஒத்துள்ள
இரு தனங்களாலும்,
உனது அடியவனாகிய நானும்
தடைப்பட்டு மடிவேனோ?..
கயிலைப்பதியில் சிவபிரானின்
திருக்குமாரனே..
கடற்கரையில் அலைகள் அருகாக
தவழ்ந்திருக்கும்
திருமயிலைப் பதியில்
வீற்றிருப்பவனே..
பெருமையுடைய
அடியார்களின் பெருமாளே..
**
ஊர் திரை வேலை (கடல்)
உலாவும் உயர் மயிலை
- என்பது ஞானசம்பந்தப் பெருமான்
திருவாக்கு..
மயிலை கபாலீச்சரம்
கடற்கரையின் அருகே இருந்ததை
இத் திருப்புகழ் வாயிலாக
அருணகிரிநாதரும் கூறுகின்றார்..
மயிலாப்பூர்
1516 ல் போர்த்துகீசியர் கையில் சிக்கியது.
அவர்கள் சிவாலயத்தைத் தகர்த்து விட்டு தங்களுக்கான
கோட்டையும், வழிபடும் இடத்தையும் கட்டிக் கொண்டார்கள்..
தற்போதுள்ள கபாலீச்சரத்தை
1672 - க்கு முன்பு சிவநேசச்செல்வர்கள்
ஒன்று கூடி எழுப்பியதாகத் தெரிகின்றது..
மேலும் விவரங்கள்
இணையத்தில் காண்க
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
ஆம். இந்த விவரங்கள் தெரிந்தவைதான். நானும் படித்திருக்கிறேன். ஓம் சிவாய நம.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கோமதி அரசு அவர்களது கருத்து
திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
மயிலை கபாலீச்சரம் அருகே இருந்ததை அறிந்துகொண்டோம்.முருகா சரணம். சிவாய நமக.
பதிலளிநீக்குகடற்கரை அருகில் கபாலீச்சரம் - தகவல் எனக்கு புதியது. பதிவில் சேர்த்திருக்கும் முதல் படம் மிகவும் பிடித்தது. தொடரட்டும் பக்தி உலா.
பதிலளிநீக்கு