நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 23
புதன் கிழமை
ஓம் ஹரி ஓம்
சரணம் சரணம்
சிவமே சரணம்
இயற்கையோடு இணைந்து
வாழ்வதே வாழ்க்கை..
இதனை -
இயற்கை பலமுறை உணர்த்தியும்
வாழ்கின்ற மக்கள்
உணர்ந்து கொள்ள வில்லை..
மீண்டும் மீண்டும்
சென்னை சிக்கிக் கொள்கின்றது..
உணர்ந்து கொள்வது அவரவர் கடமை..
நம்மைச் சூழ்ந்துள்ள எல்லா வகையான
இடுக்கண்களும் தீர்வதற்கு
வேண்டிக் கொள்வோம்..
மழையே மழையே மா மழையே
மாநிலம் செழித்திட வரும் மழையே
நிறைவாய் நிறைவாய் வாழ்ந்திடவே
முகிலாய் பெருகி வரும் மழையே..
தமிழ் நிலம் தழைத்திட வருகின்றாய்
தாள கதிகளில் பொழிகின்றாய்
அழையா மண்ணில் நுழைகின்றாய்
அடடா அல்லலைப் புரிகின்றாய்
வேளாண் இல்லா வெறுந் தரையில்
விருப்புடன் பொழிந்து நிறைக்கின்றாய்
விருப்பம் இல்லா மாந்தருடன்
வீதியில் நிறைந்தே தவிக்கின்றாய்
கண்ணில் கனவுடன் காத்திருக்கும்
காவிரிக் கரையை மறக்கின்றாய்
நெஞ்சில் நினைவுகள் பூத்திருக்க
சாரலும் விசிறிட மறுக்கின்றாய்..
தவமாய்த் தவங்கள் தானிருந்து
தயவாய் உன்னைத் துதிக்கின்றோம்..
தடமாய் தடத்தினைத் தான் பார்த்து
தழைத்திடும் நிலத்தில் பொழிவாயே..
பிழைத்திடும் மக்கள் பிழைப்பதுவும்
பிழையா வண்ணம் வருவாயே..
உழைப்பவர் உழைப்பில் முகம் பார்க்க
உயிர்முகம் காட்டி வருவாயே..
தளிராய்த் தழைத்தன தளர்ந்திருக்கும்
தஞ்சை வளநாட்டில் பொழிவாயே..
தாய்முகம் பார்த்த கன்றின் கண்களில்
ஆனந்தத் துளியாய் வழிவாயே!..
*
நலம் வாழ்க
வாழ்க நலம்
***
கவிதை நன்று. வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குபடங்கள் கண்டதும் மிகுந்த துயரம்.
பதிலளிநீக்குஇயற்கையை மனிதன் அழிப்பதால் வரும் கேடு.மழை நீர் தேங்கி ஓட இடமில்லை.
மனிதர்கள் விழித்து ஒழுங்கு செய்ய வேண்டும்.
இயற்கை அன்னை நம்மைக் காக்கட்டும்.
ஓம் சிவாய நமக.
கவி வரிகள் அருமை...
பதிலளிநீக்குதினம் செய்திகளில் பார்த்தது மிகவும் வருத்தமாய் இருக்கிறது. ஒவ்வொரு புயல் சமயத்திலும் இயற்கை நமக்கு பாடம் நடத்தி போகிறது, ஆனால் நம் ஒழுங்காய் கற்பது இல்லை.
பதிலளிநீக்குகவிதை அருமை. வேண்டும் இடத்தில் பெய்து மக்கள் கஷ்டம் போக்கட்டும். மிகுதியாக ஒரு இடத்தில் பெய்து கஷ்டத்தை கொடுக்கவேண்டாம் மழையே!