நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 13
வெள்ளிக்கிழமை
குறளமுதம்
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.. 75
**
ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைபாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.. 13
**
கொக்கு வடிவாக வந்த அரக்கன் வாயைப் பிளந்தவன்.. பொல்லாத கம்சனைக் கிள்ளிக் களைந்தவனன்..
அவனது புகழைப் பாடிக் கொண்டு கன்னியர் அனைவரும் நோன்புக் களத்தில் நுழைந்து விட்டார்கள்..
வானில் விடிவெள்ளி எழுந்து வியாழன் மறைந்து விட்டது.. பறவைகளும் கூச்சலிடத் தொடங்கி விட்டன.. பூக்களைப் போலும் கண்கள் உடையவளே.. குளிர்ந்து நீராடாமல் இன்னும் படுத்துக் கொண்டிருக்கின்றனையே?..
நன்னாள் ஆகிய இன்று கள்ள எண்ணங்களைக் களைந்து விட்டு எங்களுடன் கலந்து பெருமானை வணங்குதற்கு எழுந்து வருவாயாக!..
**
திருப்பாசுரம்
நின்று நிலம் அங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசைஅளந்த செங்கண்மாற்கு என்றும்
படையாழி புள்ஊர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி.. 2102
-: பொய்கையாழ்வார் :-
**
சிவதரிசனம்
தேவாரம்
திருக்கடைக்காப்பு
நீநாளு நன்னெஞ்சே நினைகண்டாய் ஆரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.. 2/41/3
: திருஞானசம்பந்தர் :-
**
போற்றித் திருத்தாண்டகம்
( திரு ஆரூர்)
வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி
மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித் தோல் ஆடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழல் அறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 2
-: திருநாவுக்கரசர் :-
**
திருவாசகம்
விடைவிடா துகந்த விண்ணவர் கோவே
வினையனேன் உடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 2
-: மாணிக்கவாசகர் :-
**
தொகுப்பிற்குத் துணை
நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
அதிகாலை நேரம். அடர்ந்த மரங்களிலிருந்து பறவைகளின் ஆனந்தமான சப்தங்கள்.. இப்படிப் படித்தால் இவற்றை நான் அனுபவபூர்வமாக பார்த்த, அனுபவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் அலுவலகம் நினைவுக்கு வரும். அங்குதான் அப்படி இருந்தது. என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.. ஆண்டாள் ஊர்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் விவரமான கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம் ..
படங்கள் நல்ல தேர்வு. முதல் படம் அருமை. பகிர்ந்த பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ..
இன்றைய திருப்பாவைப்பாடலின் பொருளுடன் தமிழமுதம் நன்று.
பதிலளிநீக்குகீதா
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ..