ஞாயிறு, டிசம்பர் 17, 2023

தமிழமுதம் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி முதல் நாள்
ஞாயிற்றுக்கிழமை


குறளமுதம்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு... 1
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த 
திருப்பாவை


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்  கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.. 1
**

திருப்பாசுரம்


தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க்  குறளாய்
மூவுருவில் இராமனாய்க்  கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்கோயில்
சேவலொடு பெடையன்னம்  செங்கமல மலரேறி ஊசலாடிப்
பூவணைமேல் துதைந்தெழு  செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே.. 420
-: பெரியாழ்வார் :-
**

சிவ தரிசனம்

திருத்தாண்டகம்


அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ 
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ 
துணையாய் என் நெஞ் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95/1
-: திருநாவுக்கரசர் :-

திருப்பள்ளியெழுச்சி


போற்றிஎன் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.. 1
-: மாணிக்கவாசகர் :-
**
தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை.,
தருமபுரம் ஆதீனம்
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. மார்கழி முதல் நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மார்கழி முதல் நாள்.. மங்கலம் எங்கும் பரவட்டும்.. வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. காலையில் திருப்பாவை, திருவெம்பாவை படித்து எங்கள் வளாக பிள்ளையாரை வணங்கி வந்து விட்டேன்.
    மார்கழி மாதம் நல்லபடியாக தொடங்கி இருக்கிறது.பிரபந்த பாடல், திருமுறை பாடல்களை பாடி வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மார்கழி மாதம் நல்லபடியாக தொடங்கி இருக்கின்றது...

      எங்கும் நலம் பெருகட்டும்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      ஹரி ஓம்
      நம சிவாயம்..

      நீக்கு
  3. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..