வியாழன், நவம்பர் 16, 2023

சஷ்டி 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 30
 வியாழக்கிழமை
சஷ்டி நான்காம் நாள்

தனதனத் தனனத் ... தனதான
 

இருவினைப் பிறவிக் ... கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப் ... புகுதாதே

திருவருட் கருணைப் ... பிரபையாலே
திரமெனக் கதியைப் ... பெறுவேனோ..

அரியயற் கறிதற் ... கரியானே
அடியவர்க் கெளியற் ... புதநேயா

குருவெனச் சிவனுக் ... கருள்போதா
கொடுமுடிக் குமரப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


நல்வினை, தீவினை எனும்
இரண்டினால் ஏற்படும் 
பிறவிக் கடலில் மூழ்கி,

துயரங்களுடன் அலைந்து 
திரியாமல் - உனது திருவருட்கருணை 
என்னும் ஒளியால்

உறுதி எனும் நற்கதியை 
நான் பெறுவேனோ?..

திருமாலும் பிரம்மனும்
அறிவதற்கு அரியவனே
அடியவர்க்கு எளியவனே
அன்புடைய  அற்புதனே

சிவபெருமானுக்கு 
குரு மூர்த்தியாக 
அமர்ந்த குருபரனே

கொடுமுடி எனும் திருத்தலத்தில் 
வீற்றிருக்கும் பெருமாளே..
**
 முருகா முருகா
முருகா முருகா

ஓம் சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

9 கருத்துகள்:

  1. கொடுமுடி..  நம்ம கே பி எஸ் ஊர் இல்லை?  நமசியவாய வாழ்க..  முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்..
      கே.பி. சுந்தராம்பாள் அவர்களது ஊர் தான்..

      தங்களது அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      முருகா போற்றி
      குமரா போற்றி..

      நீக்கு
  2. கொடுமுடி குமரன் திருப்புகழ் பாடி வேண்டி கொண்டேன்.
    முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      முருகா போற்றி
      குமரா போற்றி..

      நீக்கு
  3. கொடு முடிக் குமரன் பெருமாள் பாடல் பாடி வணங்கிக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி.. நன்றி ..

      முருகா போற்றி
      குமரா போற்றி..

      நீக்கு
  4. பக்கத்தில் இருந்தும் கொடுமுடிக்குப் போக முடியலை. அருமையான திருப்புகழ். முருகன் அருள் முன்னின்று அனைவரையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..