திங்கள், நவம்பர் 13, 2023

சஷ்டி 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 27
 திங்கட்கிழமை 
சஷ்டி முதல் நாள்


அருவமும் உருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய..
-: கந்தபுராணம் :-


திருமுருகனின்
ஆறுமுகங்களுக்கும்
அருணகிரிநாதர் விளக்கம் செய்த 
திருப்புகழை நாம் அறிவோம்..

இங்கே
கவியரசரின் 
கைவண்ணம்


ஆறுமுகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் என்னும்
இனிய பெயர் கொண்டான்

ஆறுமுகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் என்னும்
இனிய பெயர் கொண்டான்

கால மகள் பெற்ற மகன்
கோல முகம் வாழ்க
கந்தன் என குமரன் என
வந்த முகம் வாழ்க

கால மகள் பெற்ற மகன்
கோல முகம் வாழ்க
கந்தன் என குமரன் என
வந்த முகம் வாழ்க

ஆறுமுகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் என்னும்
இனிய பெயர் கொண்டான்

தாமரையில் பூத்து வந்த
தங்க முகம் ஒன்று
தண் நிலவின் சாறெடுத்து 
வார்த்த முகம் ஒன்று

பால் மணமும் பூ மணமும்
படிந்த முகம் ஒன்று
பாவலர்க்குப் பாடம் தரும் 
பளிங்கு முகம் ஒன்று

வேல் வடிவில் கண்ணிரண்டும் 
விளங்கும் முகம் ஒன்று
வேல் வடிவில் கண்ணிரண்டும்
விளங்கும் முகம் ஒன்று
வெள்ளி ரதம் போல வரும்
பிள்ளை முகம் ஒன்று

ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் என்னும்
இனிய பெயர் கொண்டான்..
**

திரு A.P.நாகராஜன் அவர்களது 
இயக்கத்தில்
கந்தன் கருணை 
திரைப்படப் பாடல்

பாடியவர்கள்: 
சூலமங்கலம் ராஜலட்சுமி
மற்றும் எஸ்.ஜானகி

இசை: கே.வி.மகாதேவன்


**
முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. கவிஞரின் கைவண்ணம் கருத்தைக் கவர்கிறது.  மனதில் என்றும் நிற்கும் பாடல்.  ஓம் முருகா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகப் பெருமானின் ஆறு திருமுகங்களுக்கும் இன்னும் ஒரு விதத்திலும் விளக்கம் பாடியிருக்கின்றார் கவியரசர்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி ஸ்ரீராம்..

      முருகா முருகா..

      நீக்கு
  2. அனைவருக்கும் நலமே விளையட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி வெங்கட்..

      முருகா முருகா..

      நீக்கு
  3. 'திருமுகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய' கந்த சஷ்டி தொடங்கிய நாளில் நல்ல பகிர்வு.

    அவனருளை வேண்டி நிற்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவனருளை வேண்டி நிற்போம்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி..

      முருகா முருகா..

      நீக்கு
  4. கவிஞரின் பாடல் வரிகள் அருமை. கேட்டு ரசித்த பாடல். அந்த வரிகளுடன் இன்றைய சஷ்டி 1 பதிவு சிறப்பு, துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி சகோ..

      முருகா முருகா..

      நீக்கு
  5. முருகன் அருள் முன்னின்று அனைவரையும் காக்கட்டும். இந்த வருஷம் சஷ்டி விரதம் இருக்கலாமானு யோசிச்சேன். மருத்துவர் மிகக் கண்டிப்புடன் விரதம் எல்லாம் இருக்கக் கூடாதுனு சொல்லி இருப்பது நினைவில் வந்தது. எப்போதும் போல் நாம் சாப்பாட்டு ராமிகளாகவே இருந்துப்போம். :( என்ன செய்வது? கண்ணதாசனின் இந்தப் பாடலைக் கேட்காதவரோ/பாடாதவரோ/ரசிக்காதவரோ இருப்பார்களா என்ன? அருமையான பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. இந்த வருஷம் சஷ்டி விரதம் இருக்கலாமானு யோசிச்சேன்..

    அவனது நினைவிலே இருப்பதற்கு முயற்சி செய்வோம்..

    தங்கள் அன்பின் வருகையும்
    கருத்தும் மகிழ்ச்சி..
    .நன்றி அக்கா..

    முருகா முருகா..

    பதிலளிநீக்கு
  7. இன்று மாலை கூட்டு வழிபாட்டில் சஷ்டி முதல் நாள் சஷ்டி கவசம், சண்முக கவசம் , குமாரஸ்தவம் , மற்றும் முருகன் காவடி பாடல்கள் பாடி முருகனை வழிபட்டோம்.
    இன்று நீங்கள் பகிர்ந்த பாடல் மிக இனிமையான பாடல். கேட்டு மகிழ்ந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..