சனி, அக்டோபர் 28, 2023

சதய தரிசனம்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி நிறைநிலா

சிவாலயங்களில் அன்னாபிஷேக வைபவம்

சோற்றுப் பருக்கை ஒவ்வொன்றும் 
ஒரு சிவலிங்கம் - என, ஆகின்ற நாள்..


சதய நாளாகிய
புதனன்று தஞ்சை 
ஸ்ரீ ராஜராஜேஸ்வர தரிசனம்..

அப்போது எடுக்கப்பட்ட 
படங்கள் இன்றைய பதிவில்..

அறுபதுகளில்
 கோயிலுக்குள் மட்டுமே நிகழ்த்தப்பட்ட வைபவம் - எழுபதுகளில் ராஜராஜ சோழருக்கு சிலை வைக்கப்பட்டதும் வெளியில் வந்து இன்றைக்கு சாகசம் என்று ஆகி விட்டது..

சிலை வைக்கப்படுவதற்கு முன்பு திருக்கோயிலின் வாசலில் பெரிய பந்தலும்  வாழை மாவிலைத் தோரணங்களும் தனி அழகாக இருக்கும்..

இப்போது 
கோயிலின் வாசலில் மின்னொளி அலங்காரம் என்பதால்
தமிழரின் பாரம்பரிய  தோரண அலங்காரங்கள் எதுவும் செய்யப்படவில்லை.. 






















திருமுறைப் பேழை



ஸ்ரீ நாடிராவ் தம்பதியினர்

கோயில் வளாகத்தில் புரவி நாட்டியக் கலைஞரான தஞ்சை கலைமாமணி 
ஸ்ரீ நாடி ராவ் தம்பதியினரை சந்தித்ததில் மகிழ்ச்சி..
 
அடுத்தொரு பதிவில் மேலும் சில படங்கள்.

இந்த வருடம் என்னை 
இவ்விதமாக இயக்கிய 
இறைவனுக்கு நன்றி..
***
 
மாமன்னர் புகழ் வாழ்க.

ஓம் நம சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

13 கருத்துகள்:

  1. மின்னொளிகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.  அறநிலையத்துறையின் சறுக்கல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம் ..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சத்ய தரிசன படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. கலை நிகழ்ச்சிகள் அருமையாக இருந்திருக்கும். தாங்களும் கலைஞர்களை சந்தித்திருப்பதற்கு மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. /// சதய தரிசன படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன..///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  3. படங்கள் எல்லாம் மிக அழகு. கோயில் படங்கள் அருமை. புரவி நாட்டிய கலைகர் தம்பதியரை நீங்கள் சந்தித்தது மகிழ்வான விஷயம் துரை அண்ணா. அது பற்றி எழுதுங்களேன் அடுத்த பதிவில்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரவி நாட்டிய தம்பதியரை சந்தித்தது மகிழ்வான விஷயம்..

      வேறொரு யோசனை இருக்கின்றது.. பார்க்கலாம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ ..

      நீக்கு
  4. நேரலையில்பல கோவில்கள் அன்னாபிசேகம் பார்த்து கொண்டு இருக்கிறேன்.
    நீங்கள் பகிர்ந்த படங்கள் எல்லாம் அருமை.
    சதய திருநாள் படங்கள் எல்லாம் அருமை.நாட்டிய கலைஞர்களை சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சதய திருநாள் படங்கள் எல்லாம் அருமை.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நீக்கு
  6. அழகிய தரிசனம்.

    கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  7. புரவி நாட்டியக் கலைஞரைச் சந்திக்க நேர்ந்தது சிறப்பு. படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. மின்னொளி அலங்காரத்தைத் தவிர்க்க வேண்டும். இயற்கையான வாழை மரங்கள், தென்னோலை, பனங்குருத்து வைத்து அலங்கரித்தாலே அழகு. ஆனால் இந்த விடியா அரசிடம் இதை எல்லாம் சொல்ல முடியாது. சொன்னாலும் ஏற்க மாட்டார்கள். :( இறை நம்பிக்கை இல்லாதோரிடம் அகப்பட்டுக் கொண்டு நாம் தான் கஷ்டப்படுகிறோம் எனில் கடவுளும் விழிக்கிறார். :(

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..