வெள்ளி, அக்டோபர் 20, 2023

சக்தி லீலை 6


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 3
வெள்ளிக்கிழமை

மங்களகரமான
நவராத்திரியின்
ஆறாம் நாள்.


நவராத்திரி நாட்களில்
ஜகன் மாதாவாகிய அம்பிகை
ஸ்ரீ மஹாலக்ஷ்மியாக வழிபடப்படுகின்ற நாள்.. 

செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் - என்பது அதி வீரராமபாண்டியர் திருவாக்கு..

செல்வப் பெருஞ்செல்வி அவள்.. அவள் நம்மைத் தாங்கியே தீருவாள்..

மேம்பட்ட  பெருஞ்செல்வத்தை நல்குபவள் அன்னை மஹாலக்ஷ்மி.. 

என்றாலும் பசும் பெண் கொடியாகிய பரமேஸ்வரி தான் - 
செய்யாள் -   
வெளியாள் (லக்ஷ்மி சரஸ்வதி) -  என விளங்குகின்றாள் என்று அபிராமி பட்டர் அருளிச் செய்கின்றார்..

இந்நிலையில் -
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருப்பவள் என்பதால்
ஈசனின் அருட்செயல்கள் எல்லாமே ஜகதீஸ்வரின் பங்களிப்புடன் தான் நிகழ்கின்றன.. 

இப்படியே
பெருமாளின் அருட்கொடை எல்லாமும் மலர் மகளாகிய மஹாலக்ஷ்மியின் வழியாகத் தான் நிகழ்கின்றன..

வீரம் விளை செல்வம் கல்வி எல்லாமும் இப்படித்தான்!..

கற்றார் பயில்கடல் நாகைக் காரோணத்து எங்கண்ணுதலே
விற்றாங்கிய கரம் வேல் நெடுங் கண்ணி வியன்கரமே
நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித்த கரம் நின்கரமே
செற்றார் புரஞ்செற்ற சேவகம் என்னை கொல் செப்புமினே.. 4/103/2

திரிபுர சம்ஹாரத்தின் போது வில்லினைக் கரத்தில் தாங்கி விசையொடு நின்றவள் வேல் நெடுங்கண்ணி..

சரத்தினை வலித்து எய்தது மட்டுமே நீர்..

அப்புறம் என்ன - நீர் மட்டுமே திரிபுர அசுரர்களை அழித்ததாகப் பெருமை!..

- என, வியந்து கேட்கின்றார் அப்பர் ஸ்வாமிகள்..

இதையே தான் -
வில்லான் பங்கில் வாணுதலே - என்று புகழ்கின்றார் அபிராமி பட்டர்.. 

ஈசனின் வீரட்டங்களில் மட்டுமின்றி அருட் கொடைகளிலும் ஒரு பங்கு என,  அம்பிகை தானும் நிற்கின்றனள் 
என்பது நிதர்சனம்..


அந்த வகையில் 
திரு ஆவடுதுறையில் ஞான சம்பந்தப் பெருமானுக்கு பொற்கிழி அருளப் பெற்றதையும்,

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளுக்கு 
திருப்புகலூர், திருமுதுகுன்றம்
ஆகிய தலங்களில் பொன் பொருள் அருளப் பெற்றதையும் நினைவில் கொண்டு அம்பிகையின் திருவடிகளைப் பணிந்து - ஐஸ்வர்ய லக்ஷ்மியின் அருள் நலத்தினைப் பெறுவோம்..

கல்வி தரும் தனம் முதற்கொண்டு தெய்வ வடிவு வரை அனைத்தையும் தருவது அம்பிகையின் கடைக்கண் அல்லவா!..

இதைத்தான் 
திருநாவுக்கரசு ஸ்வாமிகளும் வலியுறுத்துகின்றார்..

செந்துவர் வாய்க் கண்ணிணை வெண்ணகைத் தேன்மொழியார்
வந்து வலஞ்செய்து மாநடம் ஆட மலிந்த செல்வக்
கந்த மலி பொழில் சூழ்கடல் நாகைக் காரோணம் என்றும்
சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும் திருமங்கையே.. 4/103/5
-: திருநாவுக்கரசர் :-
***
ஓம் சக்தி ஓம்

ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்ம்யை நம:

ஓம் நம சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

13 கருத்துகள்:

  1. நவராத்திரி நாயகியின் நற்கருணையைப் பெறுவோம். பணிவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம் ..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய நவராத்திரி ஆறாம் நாள் பதிவு அருமை. அன்னை மஹாலக்ஷ்மி பற்றிய பாடல், தொகுப்புகள் நன்றாக உள்ளது. சகல சம்பத்தையும் தரும் அன்னை மஹாலக்ஷ்மியை பணிந்து போற்றி துதிப்போம்.🙏.
    ஓம். சக்தி ஓம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகல சம்பத்தையும் தரும் அன்னை மஹாலக்ஷ்மியை பணிந்து போற்றி துதிப்போம்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..நன்றி ..

      நீக்கு
  3. நவராத்திரி 6 ஆம் நாள் பதிவு அருமை.
    அம்பிகையை சரண் புகுந்தால் யாவும் அவள் தருவாள்.

    பாடல்களும், படங்களும் அருமையான தேர்வு.
    அகில நாயகி எங்கள் அனைவரையும் என்றும் காப்பாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல்களும், படங்களும் அருமையான தேர்வு..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..நன்றி ..

      நீக்கு
  4. ஐஸ்வர்ய லக்சுமியை போற்றிபாடும் பாடல் அருமை. அவள் அருளை வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..நன்றி ..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  5. கணநேரம் தன் கடைக்கண் பார்வையை நம்மீது காட்டினால் போதாதோ! அனைத்துப் பாவங்களூம் பொடிபடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்துப் பாவங்களூம் பொடியாகட்டும்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி அக்கா....

      நீக்கு
    2. வேல் நெடுங்கண்ணீ எனில் வேளாங்கண்ணீ தான் நினைவில் வந்தாள். :( இப்போத் தான் சென்னிமலை பிரச்னை ஓய்ந்திருக்கு. ;(

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..