நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 16
சனிக்கிழமை
கோவர்த்தன மலையின் அடிவாரத்தில் பசுக்களும் கன்றுகளும் காளைகளும் மேய்ந்து கொண்டிருந்தன..
கண்ணன் தனது நண்பர்களுடன் ஆங்கு ஒரு நிழலில் விளையாடிக் கொண்டிருந்தான்..
அப்போது அங்கே திரண்டு வந்த ஆயர்கள் எதற்கோ ஆயத்தமாவதைக் கண்டு -
" என்ன செய்யப் போகின்றீர்கள்?.. " என்று, அவர்களிடம் வினவினான்..
" இன்னும் சில தினங்களில் இவ்விடத்தில் இந்திரனுக்கு வழிபாடு செய்ய இருக்கின்றோம்.. " - என்றனர் ஆயர்கள்..
' இது என்ன புதுமை!.. ' என்று கண்ணன் அதிசயிக்க,
மழைக்கு ஆதாரமானவன் வருணன்.. அவனுக்குத் தலைவன் இந்திரன். அதனால் தான் அவனை வழிபடுகின்றோம்!.. - என்று விளக்கமளித்தனர் ஆயர்கள்...
" நமக்கு பசுக்களே ஆதாரம்.. பசுக்களுக்கு இந்த மேய்ச்சல் நிலமும் கோவர்த்தன மலையும் தான் ஆதாரம்.. எனவே கோவர்த்தன மலையை வணங்குவதே சாலச் சிறந்தது!.. " - என்றான் கண்ணன்..
கண்ணனின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட மக்கள் - அடுத்த சில நாட்களில் பசுக்களையும் கோவர்த்தன மலையையும் சிறப்பாக வணங்கி வழிபட்டனர்..
இதனைக் கண்ட தேவேந்திரன் கடும் கோபம் கொண்டான்.
ஆயர்களை அடக்குவதற்காக - வருணனை அழைத்து கோகுலத்தை மூழ்கடிக்கும்படி ஆணையிட்டான்..
அதன்படி கடும் மழை பெய்யத் தொடங்கியது..
பெருமழையுடன் இடியும் மின்னலும் சேர்ந்து கொண்டன.
இப்படி இரவும் - பகலுமாக ஏழு நாட்கள் கடும் மழை பெய்தது..
ஆயர்களும் பசுக்களும் தவிப்புக்குள்ளானார்கள்.
இது தேவேந்திரனின் செயலே - என்பதை உணர்ந்து கொண்ட கண்ணன் கோவர்த்தன மலையைப் பெயர்த்தெடுத்து குடையாகப் பிடித்து நின்றான்..
கோவர்த்தன மலையின் கீழ் - கன்றுகளும், பசுக்களும், கோகுலத்தோர் அனைவரும் தஞ்சம் அடைந்தனர்..
கண்ணனின் பேராற்றலைக் கண்டு அதிர்ந்த இந்திரன் கோகுலத்திற்கு வந்து கண்ணனைத் தொழுது வணங்கித் தனது பிழையை பொறுத்தருளும்படி கேட்டுக் கொண்டான்..
பசுக்களாகிய ஜீவாத்மாக்களை காத்தமையினால் கண்ணனுக்கு - கோவிந்தன் என்ற பெயரும் நிலைத்து விட்டது..
One of the most exquisite sculpture from
Hoysaleswara Temple - Halebedu, Karnataka
Thanks : Ancient Hindu Fb
Courtesy-Srinivasan Rajagopalan
**
குன்று குடையாய் எடுத்தாய்
குணம் போற்றி!..
**
ஓம் ஹரி ஓம்
***
குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன். அன்று ஞாலம் அளந்த பிரான். சென்றுசேர் திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே..
பதிலளிநீக்குநாராயண..
நீக்குநாராயண..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
இந்த இடங்களுக்கு (கோவர்தனம், கோகுலம்....) சென்றுவந்தது நினைவுக்கு வருகிறது
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி நெல்லை..
கோவர்த்தனம் சென்று அங்கு கிரிவலம் வந்தது நினைவுகளில். அங்கு உள்ள மக்கள் கிரிவலம் சமயம் அடிக்கு அடி அடி பிரதட்சனம் கீழே விழுந்து நமஸ்காரம் என்று செய்தது நினைவுகளில்.
பதிலளிநீக்குஅவர் விளையாடி களித்த இடங்களை பார்த்து பரவசம் ஆனோம்.
கதையும் விளக்கமும், படங்களும் அருமை.
கண்ணனை போற்றி துதிப்போம்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மேலதிக விவரங்களும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குகண்ணனின் விளையாடல் நன்று.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி..
அருமை ஐயா...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..