நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 6
முதல் சனிக்கிழமை
திவ்யதேசம்
திரு அழுந்தூர்
(தேரழுந்தூர்)
மூலவர்
ஸ்ரீ தேவாதிராஜன்
ஸ்ரீ செங்கமலவல்லி
உற்சவர்
ஆமருவியப்பன்
ஸ்ரீகருட விமானம்
தீர்த்தம்
தர்சன புஷ்கரிணி, காவிரி
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள்ளிருட்கண்
வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர்போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா உருவின் மறையாளர்
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே.. 1588
பாரித்தெழுந்த படை மன்னர்
தம்மை மாள பாரதத்து
தேரில் பாகனாய் ஊர்ந்த
தேவதேவன் ஊர்போலும்
நீரில் பணைத்த நெடு வாளைக்கு
அஞ்சிப் போன குருகு இனங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும்
அணியார் வயல் சூழ் அழுந்தூரே.. 1589
செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு
இறைவன் சிரங்கள் ஐயிரண்டும்
உம்பர் வாளிக்கு இலக்காக உதிர்த்த
உரவோன் ஊர்போலும்
கொம்பில் ஆர்ந்த மாதவிமேல்
கோதி மேய்ந்த வண்டினங்கள்
அம்பராவும் கண் மடவார்
ஐம்பால் அணையும் அழுந்தூரே.. 1590
வெள்ளத்துள் ஓர் ஆலிலைமேல் மேவி
அடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்
நின்றார் நின்ற ஊர்போலும்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப்
போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடும்
அணியார் வயல் சூழ் அழுந்தூரே..1591
பகலும் இரவும் தானேயாய் பாரும்
விண்ணும் தானேயாய்
நிகரில் சுடராய் இருளாகி நின்றார்
நின்ற ஊர்போலும்
துகிலின் கொடியும் தேர்த் துகளும்
துன்னி மாதர் கூந்தல் வாய்
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும்
அணியார் வீதி அழுந்தூரே.. 1592
-: திருமங்கையாழ்வார் :-
**
ஓம் ஹரி ஓம்
***
பெருமாளே.. பெருமாளே.. கோவிந்தா.. கோவிந்தா... புரட்டாசி சனி.. பெருமாள் தரிசனம். நன்றி.
பதிலளிநீக்குஅருமை ஐயா...
பதிலளிநீக்குபுரட்டாசி சனிக்கிழமை தேரழுந்தூர் பெருமாள் தரிசனம்.
பதிலளிநீக்குநிறைய தடவை பார்த்த ஊர்.
திருமங்கையாழ்வார் பாசுரம் படித்து வணங்கி கொண்டேன்.
ஆமருவியப்பன் என்னும் பெயரில் முகநூல் சிநேகிதர் ஒருத்தர் இருக்கார். இந்தக் கோயில் போனது ஒரே தரம் தான். இன்னிக்கு முதல் சனிக்கிழமை. ஆனாலும் பெருமாளூக்கு வழக்கமான சாதம், பருப்புத் தான். முடியலை. :( விரதம்னு தனியா வைச்சுக்காட்டியும் எப்போவுமே இரவுப் பலகாரம் தானே. அதான் இன்னிக்கும்.
பதிலளிநீக்கு