சனி, ஆகஸ்ட் 26, 2023

கழல் போற்றி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 9
சனிக்கிழமை

 
ஒரு நாள், கிருஷ்ணனும் பலராமனும் 
நண்பர்களுடன் யமுனை நதிக் கரையில் விளையாடிக் கொண்டு இருந்த போது,  

அரக்கன் ஒருவன் கன்று என வடிவம்  கொண்டு  கிருஷ்ணனைக் கொல்லும் நோக்கத்துடன் அங்கு வந்தான். கன்றின் வடிவுடன் வந்திருந்ததால் எளிதாக மந்தையுடன் சேர்ந்து கொண்டான்.. 

இதைக் கவனித்த கிருஷ்ணன்  ஓசைப்படாமல் கன்றாக வந்திருக்கும் அரக்கனை அணுகி -  மின்னலெனக் கன்றின் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்து, சுழற்றி அடித்து, அருகிருந்த மரத்தின் மீது வீசி எறிந்தான்.   மரத்தின் மீது மோதி உயிரிழந்த அரக்கன் மேலிருந்து கீழே தரையில் விழுந்து மடிந்தான்..


அரக்கன் தரையில் விழுந்து இறந்ததைக் கண்ட  - மற்ற சிறார்கள் கோகுலத்திற்கு ஓடிச் சென்று நடந்ததைக் கூறினர்..

அதைக் கேட்ட நந்தகோபனும் யசோதாவும் பதற்றத்துடன் ஓடி வந்து கிருஷ்ணனையும் பலராமனையும் ஆரத்தழுவிக் கொண்டனர்..

கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி!.. 


மற்றொரு சமயம் கண்ணன் நண்பர்களுடன் சேர்ந்து யமுனை நதியில் தண்ணீர் அருந்திய போது  கரையோரமாக நின்றிருந்த கொக்கு ஒன்று திடீர் என உருவத்தில் பெரியதாகியது..

அத்துடன்  கிருஷ்ணனைக் குறி வைத்து கூரிய அலகுகினால் தாக்கி,  விழுங்கியது.. 

கிருஷ்ணனை மாயக் கொக்கு விழுங்குவதைக் கண்ட அனைவரும்  பயந்து நிற்க - அதிர்ஷ்டவசமாக கிருஷ்ணன்  கொக்கின் தொண்டைக்குள் இருந்து வெளியில் வந்தான்.. 

மாய கொக்கு தனது கூரிய அலகினால் 
மீண்டும் கிருஷ்ணனைக் குத்திக் கொல்ல முயன்றது.. 


அப்போது கிருஷ்ணன் சற்றும் பதற்றமில்லாமல்   அந்தக் கொக்கின் அலகினைப் பிளந்து அழித்தான்.. 

கம்சனால் ஏவப்பட்டு
கொக்கு வடிவமாக வந்த அரக்கனும் அழிந்து போனான்..

விவரம் அறிந்து ஓடிவந்த நந்தகோபனும் யசோதாவும் குழந்தைக்கு இன்னும் என்னென்ன துன்பங்கள் நேருமோ!.. - என்று வருந்திய போது, 

அரக்கன் அழிந்ததை எண்ணி தேவர்கள்
மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்..

புள்ளின்வாய்  கீண்டானைப்  
பொல்லா  அரக்கனை கிள்ளிக்  
களைந்தானை போற்றி போற்றி!..
**
 
ஓம் ஹரி ஓம்
***

11 கருத்துகள்:

  1. மாய அரக்கர்களின் தாக்குதல் இப்போதும் தொடர்கிறது மக்களின்மேல் மனத்தாக்குதல்களாகவும் பணத்தாக்குதல்களாகவும்..கண்ணன் (ஆக) இல்லாததால் கலங்கி நிற்கின்றனர் கவலை மக்கள் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்....

      நீக்கு
  2. ஓம் ஹரி ஓம்
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  3. அறிந்த கதைகளின் தத்துவம் நம்மைச் சுற்றி இருக்கும் மாயங்களை இனம் கண்டு அதை மனோதைரியத்துடன் தகர்த்து மீள்வது. மனம் அவற்றில் சிக்காமல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  4. கிருஷ்ணர், பலராமன் கதைகளும் , அரக்கர்களை அழித்த கதைகளும் எப்போது படித்தாலும் நல்லவர்களை காக்க பரந்தாமன் வருவான் என்ற நினைப்பு வரும்.
    கண்ணன் கழல் போற்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  5. கண்ணனைப் பற்றிப் படிக்கப் படிக்க அலுக்குமா? மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..