வெள்ளி, ஆகஸ்ட் 18, 2023

குருமலை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆவணி முதல்நாள் 
வெள்ளிக்கிழமை


இன்று
சுவாமிமலை திருப்புகழ்


தனதன தனதன ... தனதான தனதன தனதன ... தனதான

நிறைமதி முகமெனு ... மொளியாலே
நெறிவிழி கணையெனு ... நிகராலே

உறவுகொள் மடவர்க ... ளுறவாமோ
உனதிரு வடியினி ... யருள்வாயே..

மறைபயி லரிதிரு ... மருகோனே
மருவல ரசுரர்கள் ... குலகாலா

குறமகள் தனைமண ... மருள்வோனே
குருமலை மருவிய ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


நிறைமதி போன்ற முக அழகுடன் அம்பு விழிகளால் போர் செய்து சொந்தம் கொண்டாடுகின்ற பெண்களின் உறவு சரியாகுமோ?..

ஆதலின்,
உனது திருவடிகளை அடைக்கலமாக இனியாகிலும் தந்தருள்வாயாக..

வேதங்களில் விளங்கும்
ஹரி பரந்தாமனின் மருமகன் ஆனவனே..
பகைவராகிய அசுர
குலத்திற்குக் காலகாலன் போன்றவனே..

குறமகள் வள்ளியை
மணம் கொண்டு அருளியவனே..
குருமலை எனும் திரு ஏரகத்தில்
வீற்றிருக்கும் பெருமாளே..
**
 
முருகா முருகா..
முருகா முருகா..
***

16 கருத்துகள்:

  1. முருகா.. செந்தில் முதல்வா சரணம். சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அருமையான, கடினமான சந்தப் பாடல் பகிர்வு நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தங்கள் பழகி விட்டால் திருப்புகழ் இனிமை

      நெல்லை தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. குருமலை முருகனை நீங்கள் பகிர்ந்த திருப்புகழ் பாடலை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
    என் கணவரின் அத்தை குருமலையில் இருந்ததாக சொல்வார்கள்.அவர்களை குருமலை அத்தை என்று அடையாளப்படுத்தி அழைப்பார்களாம்.
    அவர்களுக்கு மூன்று அத்தைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      மேலதிகக் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  4. திருப்புகழைப் பாடிப் பார்த்துக் கொண்டேன். செய்யுள்கள் என்று கற்று பல வருடங்களாயிற்றே உச்சரிப்பும் இப்படியான சந்தம் பாடல்களைச் சரியாகச் சொல்ல வருகிறதா என்றும் ஒரு சோதனை முயற்சியும் பயிற்சியுமாகச் சொல்லிப் பார்ப்பதுண்டு.

    குருமலை முருகன் தரிசனம் நன்று

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிக கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி.சகோ.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வெள்ளியன்று அழகன் முருகனை தரிசித்து கொண்டேன். திருப்புகழைப் பாடி அதன் விளக்கம் உணர்ந்து படித்து, முருகப்பெருமானை வணங்கிக் கொண்டேன். முருகா சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அழகன் முருகனை தரிசித்து கொண்டேன். திருப்புகழைப் பாடி அதன் விளக்கம் உணர்ந்து படித்து, முருகப்பெருமானை வணங்கிக் கொண்டேன்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஸ்வாமிமலை தானே? நிறையப் போனது தான். ஆனால் இப்போப் பத்து வருஷங்களாகப் போகவே இல்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாமிமலை தான்..

      தங்களுக்காக முருகன் அருள் புரிவான்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..