சனி, ஆகஸ்ட் 12, 2023

தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
 ஆடி 27
சனிக்கிழமை


 திவ்யதேசம்


திருநறையூர்
{நாச்சியார் கோயில்}

ஸ்ரீநிவாசப் பெருமாள்
நறையூர் நம்பி
வஞ்சுளவல்லி நாச்சியார்
கல் கருடன் சிறப்பு

வேளுக்குடி ஸ்வாமிகளின் 
அருளுரையைக் கேட்டதும் - 
தேடியதில் தொடர்புடையதாகக் 
கிடைத்த சில திருப்பாசுரங்களை 
இன்றைய பதிவில் 
தந்துள்ளேன்..

காணொளியாளருக்கு நன்றி


வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம்
விள்ள சிந்துக்கோன் விழ  ஊர்ந்த விமலன் ஊர்
கொள்ளைக் கொழு மீன்  உண் குருகு ஓடி பெடையோடும்
நள்ளக் கமலத்தேறல் உகுக்கும் நறையூரே..1495

பாரை ஊரும் பாரம் தீரப்  பார்த்தன் தன்
தேரை ஊரும்  தேவதேவன் சேறும் ஊர்
தாரை ஊரும் தண் தளிர் வேலி புடை சூழ
நாரை ஊரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே..1496

மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி
குடையா வரை ஒன்று எடுத்து ஆயர்கோவாய் நின்றான் கூராழிப்
படையான் வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசையேழ்
நடையா வல்ல அந்தணர் வாழ் நறையூர் நின்ற நம்பியே..1514

மண்ணின் மீபாரம் கெடுப்பான் மற மன்னர்
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேற விசயன் தேர் ஊர்ந்தானை
நண்ணி நான் நாடி  நறையூரில் கண்டேனே.. 1525
-: திருமங்கையாழ்வார் :-
 
 ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***

22 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. பதிவின் படங்களும், பாசுரங்களின் தேர்வும் சிறப்பு. திருமங்கையாழ்வார் நிறைய பதிகங்கள் இந்தக் கோவில் பற்றிப் பாடியுள்ளார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களின் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய பதிவின் படங்களிலும், காணொளியிலும் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களைப் பாடியும், ஸ்ரீ மன்நாராயணனை தரிசித்துக் கொண்டேன். ஸ்ரீ மன்நாராயணன் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. திருநறையூர் பல முறை சென்றுள்ளேன். பாசுரங்களையும் படித்துள்ளேன். இன்று உங்கள் மூலமாக மறுபடியும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஐயா..

      நீக்கு
  5. திருமங்கை ஆழ்வாரின் பாசுரமும், படங்களும் சிறப்பாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  6. நாராயண அஸ்திரம் விளக்க காணொளி அருமை.
    அஞ்சலி செய்வோம் பார்த்தனை. பார்த்தன் நம்மை காப்பார்.
    திருமங்கை யாழ்வார் பாசுரம் படித்து வேண்டிக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நாராயண.. நாராயண..

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  8. சில முறைகள் போயிருக்கேன். ஒரு தரம் வைகுண்ட ஏகாதசிக்குப் போயிட்டு உள்ளே போய்ப் படிகளில் ஏற முடியாமல் திரும்பி வந்தோம். நல்லவேளையாக உற்சவர் வீதி வலம் வர அவரைத் தரிசித்தோம். அதுக்கப்புறமாப் போகவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேல் விவரங்களும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..