புதன், ஆகஸ்ட் 09, 2023

ஆடி கிருத்திகை

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 24
புதன்கிழமை

ஆடிக் கிருத்திகை
நல்வாழ்த்துகள்


தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ... தனதான

நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோ நம
          ஞான பண்டித ஸாமீ நமோ நம ... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோ நம
     போக அந்தரி பாலா நமோ நம
          நாக பந்தம யூரா நமோநம ... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ... அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கம்பீர நாடா ளுநாயக ... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
(நன்றி கௌமாரம்)


சிவம், சக்தி எனும்
தத்துவங்களுக்கு உரிய 
மூலப்பொருள் எனத் 
திகழ்பவனே போற்றி.. போற்றி..

வேத மந்திரங்களின் உருவமாக 
விளங்குபவனே போற்றி.. போற்றி..

ஞானத் தலைவனாக 
விளங்கும் முருகனே 
போற்றி.. போற்றி..

பல கோடி 
திருப்பெயர்களை உடைய 
ஈசனின் திருக்குமாரனே 
போற்றி.. போற்றி..

அனைத்து உயிர்களுக்கும்
சுக போகங்களை நல்கும் 
பார்வதியின் புத்திரனே 
போற்றி.. போற்றி..

நாக பந்தம்  உடைய 
மயிலை வாகனமாகக் 
கொண்டவனே 
போற்றி.. போற்றி..

தேவர்களுக்கு எதிரான 
சூரர்களைத் தண்டித்து 
அழித்தவனே 
போற்றி.. போற்றி..

இன்னிசை தவழும் 
சதங்கைகளை திருவடிகளில்
உடையவனே போற்றி.. போற்றி..

தீரனே ஈடு இணையற்ற வீரனே 
போற்றி.. போற்றி..

மலைகளுக்கெல்லாம் அரசனே..
திருவிளக்குகளின் மங்கல ஒளியாய்த் 
திகழ்பவனே போற்றி.. போற்றி..

 பொன்னம்பலத்தில் 
திருவிளையாடல்களைப் 
புரிபவனே போற்றி.. போற்றி..

தேவ குஞ்சரியைப் 
பக்கத்தில் கொண்டவனே 
போற்றி.. போற்றி..

உனது திருவருளை 
அடியேனுக்குத் தந்தருள்வாயாக..

தானம், சிறப்பான வழிபாடுகள் 
பலவற்றைத் தவறாது செய்தல், 
நல்ல நூல்களைக் கற்றல், நற்குணம், 
நல்லொழுக்கம், நீதி நியாயம்,

கருணை, குருவின்
பாதங்களை வணங்குதல் 
இவற்றை மறவாமல்,

ஏழு உலகினரும் புகழ்ந்து 
வணங்குகின்ற காவேரியால்  
வளமுற்று விளங்கும்
சோழ மண்டலத்தில் 

மனதுக்கு மகிழ்ச்சியுடன்
ராஜ கம்பீர நாடாளும் நாயகனே..
வயலூருக்குத் தலைவனே..

தன்மீது அன்பு வைத்திருக்கும்
ஆரூர் சுந்தரருடன் தோழமை கொண்டு 
அவருடன் முன்பு ஒருநாள்

ஆடல்பரி எனும் சிறந்த குதிரையின் மீதேறி 
கயிலாய மாமலைக்குச் சென்று அங்கே
ஞான உலாவினைப்  பாடிய

சேரமான் பெருமானுக்கு உரிய 
கொங்கு மண்டலத்தின்
வைகாவூர்  நாட்டில்  

திரு ஆவினன்குடி என்னும் 
திருத்தலத்தில் 
தேவர்களின் வாழ்வாக 
வீற்றிருக்கும்  பெருமாளே..
**

முருகா.. முருகா
முருகா.. முருகா
***

13 கருத்துகள்:

  1. முருகா சரணம். முருகா வா.. செந்தில் முதல்வா வா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஆடிக் கிருத்திகைக்கான திருப்புகழும் அதன் பொருளும் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஆடிக்கிருத்திகை நல்வாழ்த்துக்கள். படங்களில் அழகிய முருகப்பெருமானை தரிசித்துக் கொண்டேன். இறைவனின் பரிபூரண அருள் பெற்ற அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலும், அதன் விளக்கமும் பாடி, படித்து இறைவனை வணங்கிக் கொண்டேன் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலும், அதன் விளக்கமும் பாடி, படித்து இறைவனை வணங்கிக் கொண்டேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. ஆடிகிருத்திகை பதிவு அருமை. திருப்புகழ் பாடி முருகனை தரிசனம் செய்து கொண்டேன். பாடல் பகிர்வும், விளக்கமும் அருமை.
    முருகா சரணம், முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருப்புகழ் பாடி முருகனை தரிசனம் செய்து கொண்டேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஆடிக் கிருத்திகை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. கிருத்திகை விரதமெல்லாம் எப்போவோ விட்டாச்சு. அதோடு இன்று மாமனாரி ச்ராத்தம் வேறே நடந்தது. இப்போது இரண்டு தரமாக வீட்டில் செய்யாமல் வெளியே இன்னொரு மாமி எல்லா ஏற்பாடுகளும் செய்து தருகிறார். அங்கே போய்த்தான் பண்ணிக் கொண்டிருக்கோம். இம்முறையும் அங்கே தான். ஆனால் என்னால் போக முடியலை. எப்போதும் போல் வழக்கமான வயிற்றுப் பாடு தான். இன்னும் தொல்லை தீரலை.

    பதிலளிநீக்கு
  7. முருகனை ஏன் தமிழ்க்கடவுள் என்கிறார்கள் என்பதாக ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் ஒரு யூ ட்யூப் மூலமாகப் படித்தேன். எதிலேனு நினைவில் இல்லை. ஆனால் முருகன் தத்துவம் தனி. யோக சம்பந்தப் பட்டவன் முருகன். ஆறுபடை வீடுகளும், உடலின் ஒவ்வொரு சக்கரங்களைக் குறிக்கிறது. அதைப் புரிந்து கொண்டால் நாம் பெரும்பேறு பெற்றவர்கள் ஆகிவிடுவோம். எங்கே! இந்த உலகத்து மாயைகளையே புரிஞ்சுக்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..