ஞாயிறு, ஜூலை 02, 2023

மஹாபாரதம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 17
 ஞாயிற்றுக்கிழமை


பாரதம்..
மஹாபாரதம்..

மஹா பாரதப் போரின் பிரமாண்டம்..
(நன்றி: விக்கி)


குருக்ஷேத்திரப் போரின் போது பாண்டவா் தரப்பில் ஏழு அக்ரோணி படைகளும்
கௌரவர்கள் தரப்பில் பதினோரு அக்ரோணிப் படைகளுமாக மொத்தம் பதினெட்டு அக்ரோணிப் படைகள் பங்கெடுத்தன.

ஒரு அக்ரோணி என்பது 
21,870 தேர்களையும்.,
21,870 யானைகளையும்,
65,610 குதிரைகளையும்,
1,09,350 படை வீரர்களையும் உள்ளடக்கியது..

படைப்பிரிவுகள் விவரம் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன :

ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து வீரர்கள் கொண்ட பிரிவு ஒரு பட்டி.

மூன்று பட்டிகள் ஒரு சேனாமுகம்.

மூன்று சேனாமுகங்கள் ஒரு
குல்மா..

மூன்று குல்மாக்கள் 1 ஒரு கனம்..

மூன்று கனங்கள் ஒரு வாஹினி..

மூன்று வாகினிகள் ஒரு பிரிதனா..

மூன்று பிரிதனாக்கள் ஒரு சம்மு..

மூன்று சம்முகள் ஒரு அனிகினி..

பத்து அனிகினிக்கள் ஒரு அக்ரோணி..

குருக்ஷேத்திரப் போரில் படைத் தள விபரங்கள்..

குருக்ஷேத்திரப் போரில் கௌரவா்களுக்குச் சார்பாக அஸ்தினாபுரத்துப் படைகளும் அவா்களுக்கு ஆதரவான பிற படைகளுமாகப் பதினொரு அக்ரோணி படைகள் ஒருபுறத்திலும்

பாஞ்சாலம்., விராடம்., போன்ற பல்வேறு அரசுகளின் படைகளை உள்ளடக்கிய பாண்டவா்களுக்குச் சார்பான ஏழு அக்ரோணிப் படைகள் ஒருபுறத்திலுமாகப் போரிட்டன.

துரியோதனனின்  ஹஸ்தினாபுரத்துப் படைகள்  மூன்று அக்ரோணி..

உடன் போரிட்ட மன்னர்கள்..

பகதத்தன் ஒரு அக்ரோணி.
சல்யன் ஒரு அக்ரோணி.
பூரிசுவரர்கள் ஒரு அக்ரோணி.
கிருதவா்மன் (கிருஷ்ணனின் நாராயணிப் படை) ஒரு அக்ரோணி.
ஜயத்ரதன் படை ஒரு அக்ரோணி.
காம்போஜ அரசன் சுதக்ஷ்னன் படை ஒரு அக்ரோணி.
விந்தன், அனுவிந்தனின்  அவந்திப் படை ஒரு அக்ரோணி.
கேகயர் படை ஒரு அக்ரோணி.

மொத்தம் பதினொரு
அக்ரோணி படைகள்..

யுதிஷ்டிரன் தரப்பு மன்னர்கள்..

துருபதன் ஒரு அக்ரோணி.
விராடராஜன் ஒரு அக்ரோணி.
விருஷ்னி வம்சத்துச் சாத்யகி ஒரு அக்ரோணி.
மகிஷ்மதி நீலன் ஒரு அக்ரோணி.
திருஷ்டகேது ஒரு அக்ரோணி.
ஜராசந்தனின் மகன் சயத்சேனன் ஒரு அக்ரோணி.
சோழ பாண்டியர்  ஒரு அக்ரோணி.

போரில் அமைக்கப்பட்ட  வியூகங்கள்..

1. கிரௌஞ்ச வியூகம் 
2. மகர வியூகம் 
3. கூர்ம வியூகம் 

4. திரிசூல வியூகம் 
5. சக்ர வியூகம் 
6. பத்ம வியூகம் 

7. கருட வியூகம் 
8. ஊர்மி வியூகம் 
9. மண்டல வியூகம் 

10. வஜ்ர வியூகம் 
11. சகட வியூகம் 
12. அசுர வியூகம் 

13. தேவ வியூகம் 
14. சூச்சி வியூகம் 
15. ஸ்ரிங்கடக வியூகம்

16. சந்திரகலா வியூகம் 
17. புஷ்ப வியூகம் 
18. சர்ப்ப வியூகம் 

மஹாபாரதப் போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. 

பார்வையற்ற திருதராஷ்ட்ரனுக்கு (அருகில் இருந்தபடி) - போர்க்களத்தில் நடப்பவற்றை பித்தளைத் தாம்பாளத்தில் பார்த்துப் பாா்த்து சஞ்சயன்
விவரிக்கின்றான்.. அப்படியான வரம் 
ஸ்ரீ கிருஷ்ணனால் வழங்கப்பட்டது..

மஹாபாரத போா் முடிந்த பிறகு பீஷ்மர் இறப்பதற்கு முன்பு ஸ்ரீகிருஷ்ணர் முன்னிலையில் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அருளினார். 
(அப்பொழுது  பரவச நிலையில்  அனைவரும் இருந்ததால்
குறிப்பெடுக்கத் தவறி விட்டனா்) 

பின்னா் ஸ்ரீகிருஷ்ணர் சகாதேவன் அணிந்திருந்த சுத்த ஸ்படிக மாலை இவ்வுலக நன்மைக்காக தன்னுள் கிரஹித்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சகாதேவன் மூலமாக திருப்பித் தரும் என்று கூறினார்.

பீஷ்ம நீதி, விதுர நீதி, பகவத் கீதை ஆகிய அனைத்தும் 
மஹாபாரதத்தில்  உள்ளவையே!..

பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

ஹரே கிருஷ்ண
ஹரே கிருஷ்ண
***

8 கருத்துகள்:

  1. ஏற்கெனவே படித்தவை என்றாலும் சுவாரஸ்யமான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  2. போர் தகவல்கள் பிரமிக்க வைக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மஹாபாரத போரின் படைகள் பற்றிய விபரங்களும், அதன் தொகுப்புமாக பதிவு நன்றாக உள்ளது. விபரமாக அறிந்து கொண்டேன். எல்லாம் கிருஷ்ணர் நடத்திய லீலைகள்தானே..! அவனுக்கு தெரியாதா..? உத்தவர் கீதையோடு கீதைகளின் மொத்த சங்கமமும் மஹாபாரதம். படித்துணர வேண்டியது. பிறப்பிலிருந்தே மாயைகள் சூழ்ந்த நம் வாழ்வில் சிலவற்றையாவது பின்பற்றவும் வேண்டியது. ஹரே கிருஷ்ணா... 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. சஞ்சயன் மூலம் திருதராஷ்ட்னுக்கு போர்களத்தில்நடக்கும் காட்சிகளை விவரிப்பது அருமையாக இருக்கும்.
    சகாதேவன் அணிந்து இருந்த ஸ்படிக மாலை மூலம் விஷ்ணு சஹஸ்ரநாமம் கிடைத்த தகவல் அருமை.

    பதிலளிநீக்கு
  5. tதகவல்கள் அருமை. கடைசிப் பகுதி வாசித்தவை ....இங்கும் உங்கள் வரிகளில் அறிந்து கொண்டேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. சஹாதேவனின் ஸ்படிக மாலை மூலம் விஷ்ணு சஹஸ்ரநாமம் வந்தது என இன்றே அறிந்தேன். பீஷ்மர் மூலமே வந்ததாக நினைத்திருந்தேன். தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..