நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 11
திங்கட்கிழமை
வீட்டிற்கு அருகில் அம்மன்பேட்டை கிராமத்தில் ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று ஞாயிறன்று காலை நடைபெற்றது..
மூலஸ்தானத்தில் ஸ்ரீ காமாட்சியம்மன்..
ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முருகன் சந்நிதிகளுடன்
ஸ்ரீ கருப்பர், ஸ்ரீ வீரனார் என தனித்தனி சந்நிதிகள்..
குல தெய்வமாகக் கொண்டாடுபவர்களின் சீரிய திருப்பணி.. சிறப்பான குடமுழுக்குடன் அன்னதானமும் நடைபெற்றது..
இயன்றவரை நான் எடுத்த நிகழ்வுகள் இன்றைய பதிவில்..
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே...
-: அபிராமிபட்டர் :-
ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
சிறப்பான நிகழ்வுகளை சிறப்பாக படம் எடுத்திருக்கிறீர்கள். ரசித்தேன். கும்பாபிஷேக நீரை எதிர்பார்த்து மக்கள் கைநீட்டும் படம் இரண்டு முறை வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குசரி செய்து விட்டேன்..
நன்றி ஸ்ரீராம்..
தஞ்சையில் அம்மாபேட்டை என்றொரு இடம் கேள்விப்பட்டதுண்டு. அதுவும் இந்த அம்மன்பேட்டையும் ஒன்றா?
பதிலளிநீக்குஅம்மாபேட்டை - நீடாமங்கலம் சாலையில்..
நீக்குஅம்மன் பேட்டை திரு ஐயாறு சாலயில் உள்ளது..
மகிழ்ச்சி.. நன்றி..
காமாட்சியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி...
நீக்குசிறப்பான படங்கள்...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
தரிசனம் நன்று. படங்கள் நல்லாருக்கு
பதிலளிநீக்குகீதா
ஸ்ரீகாமாட்சி அம்மன் குட்டி முழுக்கு கண்டு வணங்கினோம். படங்கள் அருமை.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் தெளிவாகவும் மனதுக்கு நிறைவாகவும் வந்திருக்கின்றன. அனைத்துப் படங்களும் அருமை. நல்லதொரு தரிசனம் கிடைக்கச் செய்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஸ்ரீ காமாட்சி அம்மன் குடமுழுக்கு படங்கள் எல்லாம் மிக அருமை. காமாட்சி அம்மன் அனைவருக்கும் நலம் பல அருள வேண்டுகிறேன்.
பதிலளிநீக்கு