செவ்வாய், ஜூன் 06, 2023

பல்லக்கு தரிசனம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 23
செவ்வாய்க்கிழமை


கரந்தை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயிலில், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு ஏழூர் பல்லக்கு புறப்பாடு (ஜூன்4) ஞாயிற்றுக் கிழமை அதிகாலை வெகு சிறப்பாக நடந்தது.

வைகாசித் திருவிழாவின் பன்னிரண்டாம் நாளான வைகாசி 21 அதிகாலை கோயிலில் இருந்து கண்ணாடி பல்லக்கு ஊர்வலம் தொடங்கியது..

வெட்டிவேர் பல்லக்கில் வசிஷ்டர், அருந்ததி 
கண்ணாடிப் பல்லக்கில் சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், எழுந்தருள அதிகாலை புறப்பாடு துவங்கியது.

சிவ கண வாத்தியங்கள், மேள தாளங்கள் முழங்க  
வெட்டிவேர் மற்றும் கண்ணாடிப் பல்லக்குகளைத் தோளில் சுமந்தபடி பக்தர்கள் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர்..



கரந்தை வீதிகளில் பல்லக்குகள் சிறப்பாக வரவேற்கப்பட்டன..

முதலிரண்டு படங்களும் இணையத்தில் கிடைத்தவை..



முப்பத்தைந்து
ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விழா என்பதால், கரந்தை முழுவதும் விழா கோலம் பூண்டிருந்தது.

பெரிய அளவில் நடைபெற்ற வாண வேடிக்கை  குறிப்பிடத்தக்கது..

ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் கோயிலுக்கு 
பல்லக்கு வந்தபோது
கீழுள்ள படங்கள்
எடுக்கப்பட்டன..

உச்சி வெயில் நேரத்தில்  தலைக்கு மேலாக நுண்ணலைபேசியை உயர்த்திப் படம் பிடிக்கையில் அதன் அமைப்புகள் தாமாகச் சுழன்று கொள்ள - பதினைந்திற்கு மேற்பட்ட காட்சிகள் வீணாகி விட்டதில் மிகவும் வருத்தம்..









கீழுள்ள
 காணொளிக்கு 
நெஞ்சார்ந்த நன்றி
திருவையாறு.in




தஞ்சை திவ்ய தேசத்தின்
புகழ் பெற்ற  இருபத்து நான்கு கருடசேவை எதிர்வரும் வைகாசி 26  வெள்ளிக் கிழமை (9/6) காலை ஏழு மணி முதல் தஞ்சையின் ராஜ வீதிகளில் நடைபெற உள்ளது..

அனைவரும் வருக..
அருளாசி பெறுக!..

வசிஷ்டேஸ்வரர்
 திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. பல்லாக்குப் படங்கள் சூப்பர்.  காணொளியைவிட படங்களே சிறப்பு.  கண்ணாடிப் பல்லக்கு நான் நினைத்தபடி இல்லை போல...   அது எது இதில்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், துரை அண்ணா எடுத்ததில் காட்சிகள் வீணாகிவிட்டன என்று சொல்லி அடுத்து பகிர்ந்திருக்கும் படங்களில் முதல் பல்லக்கு வெட்டிவேர்...

      அடுத்தப்பல கட்டம் கட்டமா கொஞ்சம் பள ப்ளன்னு பல்லக்கில் இருக்கின்றனவே அதுதான் கண்ணாடி பல்லக்கு...இரண்டு வகைகள்தான்

      கீதா

      நீக்கு
    2. அது சரி கீதா.. கண்ணாடி பல்லக்கு என்றால் கண்ணாடிகள் ஆங்காங்கே ஒட்டிய பல்லக்கு போல.. நான் முழுவதும் ட்ரான்ஸ்பரன்ட்டாக ஒரு பல்லக்கு எதிர்பார்த்தேன்!!!

      நீக்கு
  2. காணொளி தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  3. பல்லக்குகள் அழகு...படங்களும் சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. காணொளி அருமையாக இருக்கிறது. இந்தக் கோயில் பற்றிய இந்தத் தகவல்களை எல்லாம் உங்கள் மூலமே படிக்க நேர்ந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..