நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 30
சனிக்கிழமை
நெல்லழகா புல்லழகா
நிறைந்து வரும் நீரழகா
கோலழகா குழலழகா
கோகுலத்து நிறையழகா
கண்ணழகா கருத்தழகா
கனிந்துவரும் கலையழகா
மாலழகா தோளழகா
மனங்குளிரும்
மலையழகா 8
கள்ளழகா நல்லழகா
கண் காட்டும் கருத்தழகா
மண்ணழகா விண்ணழகா
மாயவனே பேரழகா
பேரழகா ஊரழகா
ஊர்காட்டும் சீரழகா
மாரழகா மணியழகா
மன்னவனே மதியழகா 16
ஓரழகா ஈரழகா
எமையாளும் நூறழகா
அன்பழகா அருளழகா
அழகு நிறைத் தமிழழகா
கல்லழகா கனியழகா
காணவந்த கலையழகா
பொன்னழகா பூவழகா
பொன்போலும் சிலையழகா..24
தொல்லழகா துணையழகா
துணையருளும் நல்லழகா
சொல்லழகா சொல்லழகா
சுந்தரனே வில்லழகா
நல்லருளும் நல்லழகாய்
நல்குவையே கள்ளழகா!..
பண்ணருளும் கண்ணழகா
பதமருள்வாய் கள்ளழகா!.. 32
**
ஓம் ஹரி ஓம்
***
படித்து வரும்பொழுதே நீங்கள் வடித்த கவிதை என்று தெரிகிறது. அருமை.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை சனிக்கிழமையன்று அழகர் தரிசனம் கிடைத்தது. மன நிறைவுடன் தரிசித்து கொண்டேன்.
அழகருக்கு நீங்கள் சூடிய அழகான பாமாலையும் அழகு. வார்த்தைகள் துள்ளி வந்து விழுந்து அருமையான பாமாலை ஆகி விட்டன. .தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமை...
பதிலளிநீக்குஅழகனுக்கான உங்கள் கவிதையும் பேரழகு. மிகவும் ரசித்தேன். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குஅருமையான பாமாலை வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகவிதை அருமை. நீங்கள் பாடிய பாமாலை என்பது புரிகிறது. அழகர் என்றாலே மனதில் தனி குஷி தான். மதுரை நினைவுகள் மேலோங்குகின்றன.
பதிலளிநீக்கு