வியாழன், மே 04, 2023

திருத்தேரோட்டம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 21
வியாழக்கிழமை

மாமதுரை
சித்திரைத் திருவிழாவின் சிகரமாக
திருத்தேரோட்டம்..

படங்களுக்கும்
காணொளிக்கும் நன்றி
திரு S.ஸ்டாலின், மதுரை.











மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை 
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணி 
செய்து நாள்தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால் 
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த 
ஆலவாய் ஆவதும் இதுவே.. 3/120/1
-: திருஞானசம்பந்தர் :-

பதிவின் பகுதி இரண்டு

திரு ஐயாறு
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய
ஐயாறப்பர் திருக்கோயிலிலும் புதன்கிழமை திருத்தேரோட்டம் நிகழ்ந்தது..

படங்களுக்கும்
காணொளிக்கும் நன்றி
நம்ம தஞ்சாவூர், 
Smk Photography.
Dharson Photography.















தஞ்சை தேரோட்டத்துக்குப் பின் வானம் சரியில்லை..
நேற்று மதியத்துக்கு மேல் இங்கே கடும் மழை.. 

இதனால் ஐயாறு சென்று தேரோட்டத்தை தரிசிக்க இயலவில்லை..
அதுவும் அவனருள்..

இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாற னாரே.. 4/38/10
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய
நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. அழகிய படங்களின் பகிர்வு.  நன்றி.  நானிருந்த இரு ஊர்களின் படங்களையும் பார்த்து ரசித்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம் ..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  2. படங்கள் அருமை...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
  3. புகைப்படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது சூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
  4. இரண்டு ஊர்களின் திருத்தேரோட்டம் படங்கள் காணொளிகள் அருமை. தரிசனம் செய்து கொண்டேன், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  5. மீனாக்ஷி ஆனை சாப்பிட்டு ரொம்ப நாளாச்சோ? வீடியோ எனக்கும் வந்திருந்தது. மிக அருமையாக மீனாக்ஷியையும், சொக்கநாதரையும் தரிசிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  6. மதுரை காட்சிகள் அருமை. தரிசித்தோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..