நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 6
சனிக்கிழமை
மகா சிவராத்திரி நாள்
இன்றைய பதிவில்
அப்பர் பெருமான்
அருளிச் செய்த
போற்றித் திருத்தாண்டகம்
ஆறாம் திருமுறை
திருப்பதிக எண் 32
அருளப்பெற்ற தலம்
திரு ஆரூர்
இறைவன்
ஸ்ரீ வன்மீகநாதர்
அம்பிகை
ஸ்ரீ அல்லியங்கோதை
தலவிருட்சம் பாதிரி
தீர்த்தம்
கமலாலய திருக்குளம்
கற்றவர்கள் உண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுதம் ஆனாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர் தம் புரம் எரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.,1
கஜ சம்ஹாரர் - வழுவூர் |
வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி
மதயானை யீருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித் தோல் ஆடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..2
மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக் கண் உடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
சிலையால் அன் றெயிலெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 3
பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப் படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..4
நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..5
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..6
வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரை கழலால் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க்கு அரும் பொருளே போற்றி போற்றி
நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..7
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளை ஏறேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..8
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி
திருமாலுக் காழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை ஆண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..9
பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி
கர நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளும்
சிரம் நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..10
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர் திருவடிகள்
போற்றி போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
போற்றித்திருத்தாண்டவம் மிக நன்றாக இருக்கிறது. இவற்றைப் பகிர்வதற்கு நன்றி
பதிலளிநீக்குஇன்றைக்கு முதல் வருகை..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்திற்கு நன்றி..
தேர்ந்தெடுத்த படங்கள் அழகு. கஜசம்ஹார்ர் சிற்பம் மிக மிக அழகாக உள்ளது. என்ன திறமை என்ன திறமை
பதிலளிநீக்குவழுவூர் கஜசம்ஹாரர்.. இப்படியான கலைகளையெல்லாம் எவனோ கடல் தாண்டி வந்தவன் சொல்லிக் கொடுத்தான் எந்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்?..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை..
நலம் வாழ்க..
ஓம் சிவாய நம.. மஹா சிவராத்திரி வந்து விட்டது... வைகுண்ட ஏகாதசிக்கும் இரவு கண்விழித்ததில்லை, சிவராத்திரிக்கு இரவு கண்விழித்ததில்லை! (இதில் என்ன பெருமை வேண்டி கிடக்கிறது என்று மனதில் தோன்றுகிறதா? பெருமை இல்லை, சொல்கிறேன்!)
பதிலளிநீக்குவைகுண்ட ஏகாதசியன்று கண் விழிக்க வில்லை என்றாலும் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு நான்கு மணிக்கு சந்நிதிக்குச் செல்ல முடிந்தது.. இன்று சிவராத்திரி.. தம்பி மருமகள் பிரசவித்திருக்கின்றாள்.. இன்னும் வீட்டுக்குள் வரவில்லை.. பதினாறு நாட்கள் தள்ளி இருக்க வேண்டும் என்கிறார்கள்..
நீக்குகோயிலுக்குச் செல்வது எப்படி?..
சிவமே துணை..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஓம் சிவாய நம..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
தரிசனம் நன்று ஜி
பதிலளிநீக்குவாழ்க வையகம்
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்..
மகிழ்ச்சி..
நன்றி ஜி..
போற்றித் திருத்தாண்டகம் படித்து இறைவனை தரிசனம் செய்து கொண்டேன். படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.
பதிலளிநீக்குஓம் நம சிவாய
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நீக்குநலமே வாழ்க..
மகா சிவராத்திரி நாளில் நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஅனைவருக்கும் சிவராத்திரி நன்நாள் வாழ்த்துகள்.
தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நீக்குவாழ்க நலம்..
போற்றித் திருத்தாண்டவம் அருமை படிக்கும் போதே பொருள் புரிகிறது. விழிக்கும் பழக்கம் இல்லை. ஆனால் முதல் ஜாமப் பூஜை, கூட்டம் இல்லை என்றால் போகும் வழக்கம் இருந்தது. இங்கு அருகில் அழகான சிவன் கோயில். தினமும் செல்கிறேன். இப்போது சிவராத்திரிக்காக ஒரு வாரமாகச் சுத்தம் (ஏற்கனவே கோயில் படு சுத்தமாக இருக்கும்) அலங்காரம் என்றும் மக்கள் வருவதற்கு வரிசைக்காகக் கம்பிகள் கூடங்கள் போன்று எழுப்பி. சன்னதியின் எல்லா புறமும் சுற்றிலும் தங்கக் கவசம் போன்ற அலங்காரம் ஜொலிப்பு!!
பதிலளிநீக்குகூட்டம் அலைமோதும். எனவே செல்வது அரிது.
இங்கே ஆயிற்று!!
கீதா
// போற்றித் திருத்தாண்டவம் அருமை படிக்கும் போதே பொருள் புரிகிறது.//
நீக்குஅன்பின் வருகையும் மேலதிக கருத்தும் மகிழ்ச்சி..
இந்த வருடம் கோயிலுக்குச் செல்ல இயலாத சூழ்நிலை..
நன்றி சகோ ..
நலமே வாழ்க..
படங்கள் எல்லாம் அழகு என்றாலும் கடீ சம்ஹாரர் ஈர்க்கிறார்.
பதிலளிநீக்குகீதா
கஜசம்ஹார மூர்த்தி.
நீக்குகாலத்தை வென்ற கலைப் படைப்பு..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ ..
நலமே வாழ்க..