நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 16
திங்கட்கிழமை
கார்த்திகை நன்னாள்..
தட்சிணாயண புண்ணிய காலத்தில்
ஆடிக் கிருத்திகையும்
உத்தராயண புண்ணிய காலத்தில்
தை கிருத்திகையும்
மிகச் சிறப்பானவை..
அந்த அளவில் இன்று
தை கிருத்திகையை முன்னிட்டு
இன்றைய பதிவில்
ஸ்ரீ அருணகிரி நாதர் அருளிச் செய்த
கந்தர் அலங்காரத்தின்
சில பாடல்கள்..
தாவடி ஓட்டு மயிலிலும் தேவர் தலையிலும் என்
பாவடி ஏட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே.. 15
பால் என்பதுமொழி பஞ்சென்பது பதம் பாவையற் கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டைக்
கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே.. 30
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடிவந்த
கோள் என் செயுங் கொடுங் கூற்று என் செயுங் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமுந்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.. 38
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்
கால்பட் டழிந்தது இங்கு என்தலை மேல் அயன் கையெழுத்தே..40
ஆலுக்கு அணிகலம் வெண்தலை மாலை அகிலம் உண்ட
மாலுக்கு அணிகலம் தண்ணந் துழாய் மயில் ஏறும் ஐயன்
காலுக்கு அணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே.. 62
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுருகா எனும் நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலும் செங் கோடன் மயூரமுமே.. 70
-: கந்தர் அலங்காரம் :-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
வீரவேல் முருகனுக்கு அரோகரா..
***
கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே.....
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு
நீக்குநன்றி ஸ்ரீராம்..
லவாழ்க நலம்..
கார்த்திகை பதிவு அருமை.
பதிலளிநீக்குகந்தர் அலங்காரம் பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
நீக்குவாழ்க நலம்..
மாவலிபால் மூவடி கேட்டு பெரிதாய் வளர்ந்த திருமாலின் மருகன்
பதிலளிநீக்குமுருகனை நினையா மனம் மைக்தி அடைவது எங்கணம்?
அனைவருக்கும் தெரிந்த நாளென் செயும் பாடல்
அவன் கால்பட்டு பிரமன் என் தலையில் எழுதிய எழுத்தும் அழிந்தது
திருமாலுக்கு அணிகலன் துளசி. வேலுக்கு அணிகலன் சூரன் என்றோரெல்லாம்
நல்ல பாடல்களைப் பகிர்ந்து காலையில் சிந்திக்க வைத்து, பக்தியை வளர்க்கிறீர்கள்.
நெல்லை
ஆழ்வார்கள் அருளியதற்கு இணையாக
நீக்குநாரணனைப் புகழ்ந்து
தேவாரத்திலும் திருப்புகழிலும்
அருளுரைகள் காணக் கிடைக்கின்றன..
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு
நன்றி நெல்லை..
வாழ்க நலம்..
முருகா...
பதிலளிநீக்குமுருகா.. முருகா..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
முருகனுக்கு அரோகரா...
பதிலளிநீக்குமுருகா.. முருகா..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஜி..
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
பதிலளிநீக்குவேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
-- 73 --
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குதிருப்பாடல் பதிவுக்கும்
கருத்துரைக்கும் நன்றி..
வாழ்க நலம்..
நாளென் செய்யும் கந்தரலங்காரப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மாபெரும் சக்தி உன்னை சரணடைந்தாலே போதுமே என்று தான் என் பிரார்த்தனை இருக்கும்
பதிலளிநீக்குகீதா
// உன்னை சரணடைந்தாலே போதுமே என்று தான் என் பிரார்த்தனை..//
நீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு
நன்றி சகோ..
வாழ்க நலம்..
கந்தர் அலங்காரம் பாடல்கள் பாடி தை கிருத்திகை நாளில் வாங்கினோம்.
பதிலளிநீக்குபல நாட்களின் பின் பாடல்கள்பாடும்போது நினைவில் வந்தன.
//கந்தர் அலங்காரம் பாடல்கள் பாடி தை கிருத்திகை நாளில் வாங்கினோம்..//
நீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு
நன்றி..
வாழ்க நலம்..