வெள்ளி, ஜனவரி 13, 2023

மலர் 29

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 29
  வெள்ளிக் கிழமை.

தமிழமுதம்
தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை 
அஃதிலார் மேற்கொள் வது.. 262
*
திவ்யதேச தரிசனம்
திரு வேங்கட மாமலை


திருப்பதி

ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் 
ஸ்ரீ புண்டரீகவல்லி

புஜங்கசயனம்
கிழக்கே திருமுக மண்டலம்.


திருச்சானூர
ஸ்ரீ அலர்மேல்மங்கை

பத்மஸரோவரம்

அமர்ந்த திருக்கோலம்
கிழக்கே திருமுக மண்டலம் .


திருமலை
ஸ்ரீ திருவேங்கடமுடையான் 
ஸ்ரீ நிவாஸன் 
ஸ்ரீ வேங்கடாசலபதி

ஆகாசகங்கை முதற்கொண்டு 
14 தீர்த்தங்கள்

நின்ற திருக்கோலம்
கிழக்கே திருமுக மண்டலம்.
ஆனந்த நிலையம்


மங்களாசாசனம்
பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், திருமழிசையாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் -
 202 பாசுரங்கள்.
மற்றும் புண்ணியர் பலர்
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 29


 சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.. 502
*
திவ்யதேசத் திருப்பாசுரம்


கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன்தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல உய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மாமலை மேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே.. 1902
-: திருமங்கையாழ்வார :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம்

திருத்தலம்
திருமறைக்காடு
வேதாரண்யம்

அம்மையப்பனின்
  திருமணக் கோலத்தை அகத்தியர்
தரிசித்த திருத்தலம்


ஸ்ரீ மறைக்காட்டு நாதர்
ஸ்ரீ யாழைப் பழித்த மொழியாள்

வன்னி
மணிகர்ணிகா தீர்த்தம்


இங்கே ஸ்ரீ துர்கை பேரழகு..
விடங்கத் தலங்கள்
ஏழினுள் ஒன்று..

அடைத்துக் கிடந்த
கோயிற் கதவுகளைத்
தமிழால் திறக்கவும் அடைக்கவுமாக
அப்பரும் சம்பந்தரும்
அருள் விளையாடல் நிகழ்த்திய தலம்.


கோளறு திருப்பதிகம் அருளப்பெற்றது இத்தலத்தில் தான்..


திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
*
தேவாரம்


யாழைப்பழித் தன்ன மொழி
மங்கை ஒரு பங்கன்
பேழைச் சடை முடிமேற் பிறை
வைத்தான் இடம் பேணில்
தாழைப்பொழில் ஊடே சென்று
பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக் குரங்குண்ணும் மறைக்காடே.. 7/71/1
-: சுந்தரர் :-
*

திருவாசகம்
திருஅம்மானை
 

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.. 
8/8/8
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. ஹரியும் சிவனும் அனைவரையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவு அருமை. அருமையான பாடல்களும் பக்தியுமாய் பதிவு நன்றாக உள்ளது.

    பரந்தாமனின் அழகு தரிசனங்கள் யாவையையும் கண்டு கொண்டேன். ஆஹா.. வேங்கடமாமலை கோவிந்தனின் தரிசனம் மனதில் பக்தியுடன் பதிகிறது. கண் குளிர கண்டு கொண்டேன்.

    சிவ தரிசனத்தில் ஸ்ரீ மறைக்காட்டு நாதரரையும்
    அன்னை ஸ்ரீ யாழைப் பழித்த மொழியாள் அம்பிகையையும் தரிசித்துக் கொண்டேன். அன்னையின் பெயரே அழகு கொஞ்சும்படி உள்ளது.

    இறைவன் அனைத்துலக மாந்தர்களையும் அருள் கூர்ந்து காப்பார். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இறைவன் அனைத்துலக மாந்தர்களையும் அருள் கூர்ந்து காப்பார். //

      தங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. இன்றைய தரிசனம் நன்று.
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. வெள்ளி நாளில் வேங்கட மாமலை, வேதாரண்யம் , இறைவனை போற்றி ,தரிசித்து மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. படங்கள் அனைத்தும் அருமை. பகிர்ந்த பாடல்களை பாடி கோயில்களை தரிசனம் செய்து கோண்டேன்.
    மார்கழி முழுவதும் அருமையான தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மார்கழி முழுவதும் அருமையான தரிசனம்.. //

      இது நமது கடமை..

      தங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலமே வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..