நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 25
திங்கட்கிழமை.
தமிழமுதம்
ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.. 225
*
திவ்யதேச தரிசனம்
திரு கச்சி
அத்திகிரி
ஸ்ரீ அத்தி வரதர் |
ஸ்ரீ வரதராஜப்
பெருமாள்
ஸ்ரீ பெருந்தேவி தாயார்
அனந்த சரஸ் நீருக்குள்
ஸ்ரீ அத்திவரதர்
வேகவதி நதி அனந்தசரஸ்
நின்ற திருக்கோலம்
மேற்கே திருமுக மண்டலம்.
புண்யகோடி விமானம்.
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
பூதத்தாழ்வார் பேயாழ்வார்
ஏழு பாசுரங்கள்.
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.. 498
*
திவ்யதேசத் திருப்பாசுரம்
ஸ்ரீ வரதராஜப்பெருமாள் |
என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகேத்தும்
ஆழியான் அத்தியூரான்.. 1426
-: பூதத்தாழ்வார் :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**
சிவதரிசனம்
திருத்தலம்
திருவாஞ்சியம்
காசிக்கு நிகரான தலம்
ஸ்ரீ வாஞ்சிநாத ஸ்வாமி
ஸ்ரீ மங்களநாயகி
சந்தனமரம்
குப்த கங்கை
யம தீர்த்தம்
யமதர்ம ராஜன் வழிபட்ட தலம்
திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
**
தேவாரம்
மைகொள் கண்டர்எண் தோளர்
மலைமக ளுடனுறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை
குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலங் கழனி
கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்
பைதல் வெண்பிறை யோடு
பாம்புடன் வைப்பது பரிசே.. 7/76/5
-: சுந்தரர் :-
*
திருவாசகம்
திருஅம்மானை
இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச் சிவன்அவனி வந்தருளி
எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச்
சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான்
பந்தம் பறியப் பரிமேற்கொண் டான்தந்த
அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.. 8/8/3
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
அத்தி வரதர் அருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன். உடல்நிலை முற்றிலு சரியானதா?
பதிலளிநீக்குமுழுமையாகக் குணமடைய மூன்று மாதங்கள் ஆகுமாம்..
நீக்குஅன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க..
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
ஓம் சிவாய நம..
நீக்குவாழ்க வளமுடன்..
மகிழ்ச்சி.. நன்றி ஜி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமார்கழி பதிவு அருமை. இறையின் மேல் பாடல்கள் அனைத்தையும் படித்து மகிழ்ந்தேன். அத்திவரதரின் அழகு முகமும், அன்னையின் கனிவும், அன்பின் சிவனாரின் அருள் பார்வையும் கண்களையும் மனதையும் நிறைத்தது. மனமுருக தரிசித்து கொண்டேன். இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலம் வாழ்க..
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஓம் சிவாய நம..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
இன்றைய மலர் அழகு....
பதிலளிநீக்குஅண்ணா உங்களின் கால் வீக்கம் இப்ப பரவாயில்லையா?
கீதா
வீக்கம் குறைவதும் கூடுவதுமாக இருக்கின்றது.. முழுமையாகக் குணமடைய மூன்று மாதங்கள் ஆகுமாம்..
நீக்குஅன்பின் வருகையும் நலம் விசாரிப்பும் மகிழ்ச்சி..
நன்றி சகோ..
நலம் வாழ்க..
அகத்தி வரதர்,திருவாஞ்சியம் தலங்கள் இறைவணக்கம் செலுத்தினோம்.
பதிலளிநீக்குபடங்களும் கண்குளிர கிடைத்தது.
நீங்கள் நலமடைய வைத்தீஸ்வரனை வேண்டுகிறோம்.
தங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் நலம் விசாரிப்பு வேண்டுதலும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ..
நலம் வாழ்க..
அத்திவரதர், திருவாஞ்சியம் இறைவனையும் தரிசனம் செய்து கொண்டேன். பாடல்கள் பகிர்வு அருமை. படித்து காலை பொழுதில் வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குகால் வீக்கம் குறைந்து வருவது மகிழ்ச்சி. இறைவன் அருளால் நல்லபடியாக முற்றிலும் குணமாகிவிடும். தைரியமாக இருங்கள்.
// இறைவன் அருளால் நல்லபடியாக முற்றிலும் குணமாகிவிடும். தைரியமாக இருங்கள்.//
நீக்குஅன்பின் வருகையும் ஆறுதல் மொழிகளும் மகிழ்ச்சி..
நன்றி ..
நலம் வாழ்க..