புதன், ஜனவரி 04, 2023

மலர் 20

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 20
  புதன் கிழமை.

தமிழமுதம்
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் 
எழுமையும் ஏமாப் புடைத்து.. 126
*
திவ்யதேச தரிசனம்
திரு நந்திபுர விண்ணகரம்
நாதன் கோயில்

ஸ்ரீ ஜகந்நாதப் பெருமாள்
ஸ்ரீ செண்பகவல்லி நாச்சியார்.

நந்தி தீர்த்தம்.

வீற்றிருந்த திருக்கோலம் 
மேற்கே திருமுக மண்டலம்.
மந்தார விமானம்

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
10 பாசுரங்கள்
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 20


முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.. 493
*
திவ்யதேசத் திருப்பாசுரம்



தீதறு நிலத்தொடு எரி காலினொடு 
நீர் கெழு விசும்பும் அவையாய்
மாசறு மனத்தினொடு உறக்கமொடு 
இறக்கை அவையாய பெருமான்
தாய் செற உளைந்து தயிர் உண்டு 
குடமாடு தட மார்வர் தகைசேர்
நாதன் உறைகின்ற நகர் நந்திபுர 
விண்ணகரம் நண்ணு மனமே.. 1438
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம்
திருத்தலம்
திருப்பிரமபுரம்
சீர்காழி

பிரம்மனும் தேவர்களும் வழிபட்ட திருத்தலம்


இறைவன்
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
தோணியப்பர்
சட்டநாதர்
 
அம்பிகை
ஸ்ரீ பெரியநாயகி
திருநிலை நாயகி

பாரிஜாதம்
பிரம்ம தீர்த்தம் முதற்கொண்டு
22 தீர்த்தங்கள்


ஊழிக் காலத்தில் மிதந்திருந்த தலம். 
ஆதலால் தோணிபுரம்.
**
திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
*

தேவாரம்


எம்பிரான் எனக்கமுதம் ஆவானும் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானும் தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற் பிரம புரத்துறையும் வானவனே.. 2/40/1
-: திருஞானசம்பந்தர் :-
*

திருவாசகம்
திருவெம்பாவை
 

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல் பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.. 15

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.. 16
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. அமிழ்தினும் இனிய தமிழால் அகிலாண்ட நாயகர்களைத் துதிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      இரண்டு நாட்களாக
      உடல் வேதனை அதிகம்.. எனவே தாமதம் ஆயிற்று..

      நீக்கு
  2. ஓம் நமசிவாய வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      இரண்டு நாட்களாக
      உடல் வேதனை அதிகம்.. எனவே தாமதம் ஆயிற்று..

      நீக்கு
  3. நந்திபுர விண்ணகரம், சீர்காழி சுவாமி தரிசனம் அருமை.பாடல்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் தரிசனமும் மகிழ்ச்சி..

      நன்றி..

      இரண்டு நாட்களாக
      உடல் வேதனை அதிகம்.. எனவே தாமதம் ஆயிற்று..

      நீக்கு
  4. நந்திபுர விண்ணகரம், தோணி அப்பர் தரிசனம் பெற்று மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் தரிசனமும் மகிழ்ச்சி.. நன்றி..

      இரண்டு நாட்களாக
      உடல் வேதனை அதிகம்.. எனவே தாமதம் ஆயிற்று..

      நீக்கு
  5. பதில்கள்
    1. ஓம் சிவாய நம..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      இரண்டு நாட்களாக
      உடல் வேதனை அதிகம்.. எனவே தாமதம் ஆயிற்று..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    நலமா? தங்கள் உடல் நலம் இப்போது எப்படி உள்ளது? ? பதிவும், அனைத்து இறைவனாரின் கோவில் படங்களும், கோவில்களை பற்றிய விபரங்களும் திருப் பதிக, பாசுர பாடல்களும் நன்றாக உள்ளது. நலங்கள் யாவும் தரும் நாராயணனையும், எம்பெருமான் சிவபெருமானையும், கண்டு கழித்து மனமுருகி வணங்கி கொண்டேன்.

    உங்களின் மார்கழி பதிவில் ஆரம்பத்திலிருந்து பக்தியுடன் கலந்து கொண்ட நான் நடுவில் ஏற்பட்ட சூழ்நிலைகளில் நிறைய நாட்கள் வர இயலாமல் போய் விட்டது. மன்னிக்கவும். விடுபட்ட அதையெல்லாம் நடுநடுவே படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் தரிசனமும் மகிழ்ச்சி.. நன்றி..

      இரண்டு நாட்களாக
      உடல் வேதனை அதிகம்.. இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை..

      எனவே தாமதம் ஆயிற்று..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..