நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 13
இரண்டாவது
வெள்ளிக்கிழமை
அன்னையிடம் ஒரு முறையீடு..
தெரிந்தோ அலாது தெரியாமலோ இவ்வடிமை
செய்திட்ட பிழை இருந்தால் சினம் கொண்டு அது ஓர்
கணக்காக வையாது நின் திருஉளம் இரங்கி மிகவும்
பரிந்து வந்து இனியேனும் பாழ் வினையில் ஆழ்ந்து
இன்னல் படாது நல்வரம் அளித்துப் பாதுகாத்து அருள் செய்ய
வேண்டும் அண்டாண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி
புரந்தரன் போதன் மாதவன் ஆகியோர்கள் துதி புரியும்
பதாம்புய மலர்ப் புங்கவி புராந்தகி புரந்தரி
புராதனி புராணி திரிபுவனேசுவரி
மருந்தினும் நயந்த சொல் பைங்கிளி வராகி எழில்
வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி
சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே!..
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சமு தாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே... 5
சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத் தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.. 8
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்ப துன்னை
என்றும் வணங்குவ துன்மலர்த் தாள் எழு தாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்
தன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே.. 10
கண்ணியது உன்புகழ், கற்பது உன் நாமம்
கசிந்து பத்தி பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்
பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து
நான் முன்செய்த புண்ணியம் ஏது? என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.. 12
-: அபிராம பட்டர் :-
-::-
ஓம் சக்தி ஓம்
சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
முதல் வரியைப் படிக்கும்போது 'போனது போகட்டும்.. இனியாகிலும் நெஞ்சம் புனிதம் ஆகட்டுமே' வரிகள் நினைவுக்கு வருகின்றன. பிள்ளை செய்த பிழைகளை தாய் பொறுக்காமல் யார் பொறுப்பார்?
பதிலளிநீக்கு// பிள்ளை செய்த பிழைகளை தாய் பொறுக்காமல் யார் பொறுப்பார்?.. //
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு
நன்றி ஸ்ரீராம்..
வாழ்க நலம்..
தரிசனம் நன்று
பதிலளிநீக்குவாழ்க வையகம்
தங்கள் அன்பின் தரிசனத்துக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி..
வாழ்க நலம்..
தை வெள்ளியில் அருமையான தரிசனம்.
பதிலளிநீக்குஅபிராமி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
ஓம் சக்தி ஓம்!
// அபிராமி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
நீக்குஓம் சக்தி ஓம்!.. //
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ..
வாழ்க நலம்..
அன்னையின் அருளால் அனைவருக்கும் நலமே விளையட்டும்.
பதிலளிநீக்கு// அன்னையின் அருளால் அனைவருக்கும் நலமே விளையட்டும்.. //
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றியக்கா ..
அருமை...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
ஓம் சிவாய நம..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
துரை அண்ணா, பாடலின் முதல் ஐந்து வரிகளைப் படித்ததும், ம்ம்ம் நாம் எவ்வளவு மன்னிப்பு கேட்டாலும் எதுவும் ஆவதில்லையே....தினமும் நன்றியும், மன்னிப்பும் சொல்லிக் கொள்வதுண்டு படுக்கும் முன்... நலமே விளையட்டும்.
பதிலளிநீக்குகீதா
// நாம் எவ்வளவு மன்னிப்பு கேட்டாலும் எதுவும் ஆவதில்லையே.. //
நீக்குஅந்த அளவுக்கு அஸ்திவாரம் பலமாக இருக்கின்றது..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி சகோ..
அகிலாண்ட அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுவோம் .
பதிலளிநீக்கு// அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுவோம்.. //
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..