சனி, டிசம்பர் 10, 2022

சாமி சரணம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 24
 சனிக்கிழமை


இன்றொரு காணொளி.

திரு.G.தேவராஜன் அவர்களது இசையில் வயலார் ராமவர்மா இயற்றிய பாடல்..  
பாடியிருப்பவர் திரு K.J. ஜேசுதாஸ் அவர்கள்..
திரைப்படத்தின் பெயர் அறியமுடியவில்லை..

சகோதரி 
கீதாரங்கன் அவர்கள்  இதுபற்றி மேல் விவரங்கள் அறிந்திருந்தால் வழங்கலாம்..


இன்று அதிகாலை புயல் கரையைக் கடந்துள்ளது.. 

இதனால் சென்னையிலும் சுற்றுப் புறங்களிலும் கனத்த மழை பெய்து கொண்டிருக்கின்றது.. 

இதுவும் இயற்கையின் விளையாட்டுகளில் ஒன்றுதான் எனினும் இதனால் துயருற்றிருக்கும் ஏழை எளிய மக்களுக்காகவும் சிற்றுயிர்களுக்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம்..

ஐயப்பன் அருளால் 
அனைவருடைய 
குறைகளும் குற்றங்களும் தீரட்டும்.
எங்கும் நலமே நிறையட்டும்.

ஓம்
சாமியே சரணம் ஐயப்பா
***

8 கருத்துகள்:

  1. கூடியவரையிலும் பிரச்னை ஏதுமில்லாமல் புயல் கரையைக்கடந்திருப்பதாகத் தெரிய வருகிறது மழை, வெள்ளத்தால் மரங்கள் நிறைய விழுந்திருக்கின்றன. அது தான் மனதுக்கும் கஷ்டமாக இருக்கிறது. பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கும் விரைவில்நிவாரணம் கிடைக்க வேண்டும். காணொளி திறக்கவில்லை. :(

    சாமியே சரணம் ஐயப்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கிருந்த
      நெடுஞ்சாலைகளில் விரிவாக்கம் என்று எல்லா மரங்களும் ஏற்கனவே வெட்டித் தள்ளப்பட்டு பொட்டலாக ஆகி விட்டது.. இங்கு தூறல் தான்.. காற்றும் அதிகம் இல்லை.. ஆனாலும் மக்களுக்குக் கஷ்டம்..

      எல்லாம் இறைவன் செயல்..

      தங்கள் அன்பின் வருகைக்கு நன்றியக்கா...

      நீக்கு
  2. என்ன பாடல் என்று பின்னர் மொபைலில் கேட்கவேண்டும்.  கணினியில் ஸ்பீக்கர் அவுட்!  புயல் கரையைக் கடந்ததே தெரியாது!!  வீட்டுக்குள் இருந்துவிட்டால் வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாது!  காலை எழுந்தது தாமதம் இன்று.  ஒரு பிரிவுபச்சார விழாவுக்குச் செல்லவேண்டும்!  ஆரோக்கிய சமையல் ஹேமா விருப்ப ஓய்வில் செல்ல இருப்பதால் இன்று பார்ட்டி தருகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகல நேரத்தில் புயல் கரை கடக்கும் ஜாலத்தை வாழ்க்கையில் இரண்டு முறை கண்டிருக்கின்றேன்..

      இப்போது அவ்வாறெல்லாம் இயலவில்லை..

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..