திங்கள், டிசம்பர் 05, 2022

பஞ்சபுராணம் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 19
  திங்கட்கிழமை
மூன்றாவது சோமவாரம்

சிவாலயங்களில்  
மூன்றாம் வாரத்தின் 
சங்காபிஷேகம்..

பஞ்சபுராணம்


தேவாரம்
பண்ணிடைத் தமிழொப்பாய்
பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய்
கடுஇருட் சுடரொப்பாய்
மண்ணிடை யடியார்கள்
மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.. 7/29
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-


திருவாசகம்
ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
விழுமிய தளித்ததோ ரன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
-: மாணிக்கவாசகர் :-

திரு இசைப்பா
பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர்
தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்னெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
எளிமையை யென்றுநான் மறக்கேன்
மின்னெடும் புருவத் திளமயி லனையார்
விலங்கல்செய் நாடக சாலை
இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.. 9/16
-: கருவூரார் :-


திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே..9/29
-: சேந்தனார் :-


பெரியபுராணம்
கொம்பனார் இல்ல மெங்கும்
குறைவிலா நிறைவிற் காணும்
அம்பொனின் குவையும் நெல்லும்
அரிசியும் முதலா யுள்ள
எம்பிரான் அருளாம் என்றே
இருகரங் குவித்துப் போற்றித்
தம்பெருங் கணவ னார்க்குத்
திருவமு தமைக்கச் சார்ந்தார்.
 12/11
(குங்கிலியக் கலய நாயனார் புராணம்)
-: சேக்கிழார் :-


திருப்புகழ்
பத்தியால் யானுனைப் ... பலகாலும்
பற்றியே மாதிருப் ... புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் ... கருள்வாயே
உத்தமா தானசற் ... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ... கிரிவாசா
வித்தகா ஞானசத் ... திநிபாதா
வெற்றிவே லாயுதப் ... பெருமாளே.
-: அருணகிரிநாதர் :-


கந்தபுராணம்
பன்னிரு கரத்தாய் போற்றி
பசும்பொன் மாமயிலாய் போற்றி
முன்னிய கருணை ஆறு
முகப்பரம் பொருளே போற்றி
கன்னியர் இருவர் நீங்காக்
கருணை வாரிதியே போற்றி
என்னிரு கண்ணே கண்ணுள்
இருக்குமா மணியே போற்றி..
-: கச்சியப்ப சிவாசாரியார் :-

திருச்சிற்றம்பலம்
***

12 கருத்துகள்:

  1. தமிழ்ச்சுவையில் மூழ்கி சிவனையும் அவர் மைந்தனையும் வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்ச்சுவை..
      தமிழே சுவை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. தரிசனம் நன்று வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  3. பஞ்சபுராணத்துடன் திருப்புகழ், கந்த புராணம் ஆகியவற்றையும் சேர்த்தது சிறப்பு. போய் ஒளிஞ்சுக்காமல் இருக்கணுமே பிள்ளையாரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பஞ்ச புராணத்துடன் திருப்புகழ், கந்த புராணம் ஆகியவற்றையும் சேர்த்தது சிறப்பு //

      இது சான்றோர்களால்
      வகுக்கப்பட்டது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நீக்கு
  4. சுயம்வரத்தில் சிவன், முருகன் இருவரையும் துதித்துப் பாடி பகிர்ந்து சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..