நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 13
புதன் கிழமை.
தமிழமுதம்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.. 81
*
திவ்யதேச தரிசனம்
திருவிண்ணகர்
ஸ்ரீ ஒப்பிலியப்ப ஸ்வாமி
ஸ்ரீ நிலமாமகள் நாச்சியார்
வகுளம்
அஹோராத்ர புஷ்கரணி
கிழக்கு நோக்கி
நின்ற திருக்கோலம்.
சுத்தானந்த விமானம்
மங்களாசாசனம்
பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார்,
நம்மாழ்வார்..
47 பாசுரங்கள்
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 13
புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.. 486
*
திவ்யதேச திருப்பாசுரம்
ஸ்ரீ ஒப்பிலியப்ப ஸ்வாமி |
போதார் தாமரையாள் புலவி குல வானவர்தம்
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூமொழியாய் சுடர்போல் என் மனத்திருந்த
வேதா நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே.. 1466
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)
**
சிவதரிசனம்
திருத்தலம்
திரு சிராப்பள்ளி
பேறு காலத்தில் ஆதரவற்று இருந்த பெண்ணுக்கு இறைவன் தாயாக வந்தருளிய தலம்.
ஸ்ரீ தாயுமான ஸ்வாமி
ஸ்ரீ மட்டுவார்குழலி
வில்வம்
பிரம்ம தீர்த்தம்
திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்
*
தேவாரம்
நன்றுடையானைத் தீயதிலானை
நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொருபாகம்
உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச்
சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளங்
குளிரும்மே.. 1/98/1
-: திருஞானசம்பந்தர்:-
*
திருவாசகம்
திருவெம்பாவை
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.. 1
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.. 2
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
அட நம்ம ஒப்பிலியப்பன்... வணங்குவோம்.
பதிலளிநீக்கு
நீக்குவணங்குவோம்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
ஓம் சிவாய நம..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
வாழ்க வையகம்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஜி..
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை //
பதிலளிநீக்குஇந்தப் பாடலை நான் படித்த காலத்தில் மனப்பாடமாகப் பாடியதுண்டு ராகத்துடன்.....
இந்த வரி மிகவும் பிடித்த வரி. உருவமற்ற, சோதி வடிவான பரம் பொருள் ஆதியும் அந்தமும் இல்லாத மாபெரும் சக்தி, இறை என்றால் இதுதான் என்று என் மனதில் ஆழப் பதிந்த பொருள்...
கீதா
//உருவமற்ற, சோதி வடிவான பரம் பொருள் ஆதியும் அந்தமும் இல்லாத மாபெரும் சக்தி, இறை என்றால் இதுதான் என்று..//
நீக்குஉண்மை.. உண்மை..
அன்பின் வருகையும்
கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி சகோ..
அனைத்தும் அருமை. பாடல்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும்
நீக்குதரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
ஒப்பில்லா அப்பன் தரிசனம் அருமை. தாயுமானவர் தரிசனமும் அருமை.பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும்
நீக்குதரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
வாழ்க நலம்..